அமெரிக்காவில் உள்ள ஒரு பெண், தன்னுடைய கணவனின் இறந்த உடலை ஒன்பது மாதங்களாக வீட்டில் பாதுகாத்து வந்ததாக குற்றம் சாட்டி கைது செய்யப்பட்டார். இதுகுறித்த அதிர்ச்சி தகவல் வருமாறு:

அமெரிக்காவில் உள்ள Lafayette என்ற பகுதியை சேர்ந்த Ila Solomon என்றா 54 வயது தன்னுடைய கணவர் Gerald Gavan அவர்களின் இறந்த உடலை முறைப்படி அடக்கம் செய்யாமல் தன்னுடைய வீட்டிலேயே ஒன்பது மாதங்களாக வைத்துள்ளார். ஐஸ்கட்டியின் மேல் வைத்து அவர் பிணத்தை பாதுகாத்து வந்ததற்கு கூறும் காரணம் மிகவும் ஆச்சரியம் மிக்கதாக இருந்தது.

தன்னுடைய கணவர் இறக்கும் தருவாயில் தன்னுடைய உடலை புதைக்கவோ அல்லது எரிக்கவோ வேண்டாம் என்று கூறியதாகவும், தன்னுடைய உடலை பறவைகள் உணவாகக்கொள்ளவேண்டும் என்றும் Ila Solomon அவர்களிடம் கூறினாராம்.

எனவே தன்னுடைய கணவரின் பிணத்தை வீட்டில் வைத்து ஜன்னலையும் திறந்து வைத்துள்ளதாகவும், ஜன்னல் வழியே பறவைகள் வந்து தன்னுடைய உடலை சாப்பிடவேண்டும் என்று தான் ஒன்பது மாதங்களாக காத்திருப்பதாகவும், ஆனால் இதுவரை எந்த பறவையும் வீட்டிற்குள் வரவில்லை என்று கூறுகிறார்.

போலீஸார் அவருடைய கூற்றை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். கணவர் இறந்த அதிர்ச்சியில் அவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டிருக்கலாம் என கருதி அவரை மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply