ஈராக்கில் 7 வயது சிறுமியை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி திருமணம் செய்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படம் உலாவி வருகிறது.
ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கிறிஸ்தவர்களை கட்டாயப்படுத்தி மதம் மாற்றி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், திருமணம் மூலமாகவும் மதம் மாற்றம் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இஸ்லாமிய டிவிட்டர் பயனாளி ஒருவர், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த ஒரு வாலிபர் அழும் சிறுமியுடன் நிற்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ஏழு வயதான அந்த சிறுமியை உடன் நிற்கும் நபர் திருமணம் செய்துள்ளதாகவும் அந்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும் அந்த போட்டோ எடுக்கப்பட்டது ஈராக் அல்லது சிரியா என எந்த நாடு என்பது குறிப்பிடப்படவில்லை. இவரது டிவிட்டரில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் ஷியா பிரிவு இஸ்லாமியர்களை கொடூரமாக கொன்ற புகைப்படங்களும் உள்ளன.
அரபு நாட்டு தொலைக்காட்சியான சேனலான அல்-ஹயத் கூட இதை ஒளிபரப்பிவருகிறது. திருமணத்துக்கு பெண் தேட ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் அலுவலகமே திறந்துவிட்டனர் என்று கடந்த மாதமே, பிரபல செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது நினைவிருக்கலாம்.
வடக்கு சிரிய பகுதியில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் திருமண அலுவலகம் திறந்ததுடன், திருமணமாகாத மற்றும், விதவை பெண்கள் தங்களை திருமணம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தியதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன்மூலம், ஜிகாத் நடத்த அதிகம் குழந்தைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்று ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் நம்பிக்கொண்டிருப்பதாகவும் அந்த செய்திகள் தெரிவித்தன.