இங்கிலாந்தில் உள்ள ரயில் நிலையம் ஒன்றில் ஒரு வயது குழந்தை ஒன்று எதிர்பாராதவிதமாக ரயில்வே தண்டவாளத்தில் விழுந்துவிட்டது. ரயில் மிக அருகில் நெருங்கி வரும் நிலையிலும் குழந்தையை காப்பாற்ற அந்த குழந்தையின் தாயார் தைரியமாக ரயில்வே தண்டவாளத்தில் இறங்கி குழந்தையின் உயிரை காப்பாற்றிய அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
இங்கிலாந்து நாட்டில் உள்ள Goodge Street Tube station என்ற ரயில்வே நிலையத்திற்கு ஒரு வயது குழந்தையுடன் வந்த தம்பதிகள், குழந்தையை சக்கர வண்டி இருத்திவிட்டு மற்றக் குழந்தையை எடுத்துவர சென்றனர்.
அந்த சமயத்தில் குழந்தை உட்கார்ந்திருந்த சக்கர வண்டி தானாகவே உருண்டு அருகில் இருந்த ரயில்வே தண்டவாளத்தில் விழுந்துவிட்டது.
போய்விட்டு வந்த குழந்தையின் தாயார் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். குழந்தை விழுந்து கிடந்த ரயில்வே டிராக்கில் மிக அருகில் ரயில் வந்துவிட்டது.
ஆயினும் அந்த தாய் சிறிதுகூட யோசிக்காமல் ரயில்வே டிராக்கில் குதித்து தனது குழந்தையை காப்பாற்றினார். இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, அதன் வீடியோ தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது.