ஜப்பானிலுள்ள ஒறியன்ட் இன்டஸ்றி நிறுவனம் செயற்கை மனைவிகளை உருவாக்கி விற்பனைக்கு விட்டுள்ளது.
பெண்களுடையதையொத்த மென்மையான தோல் மற்றும் கவர்ச்சிகரமான கண்கள் என்பவற்றை இந்த செயற்கை மனைவி பொம்மைகள் கொண்டுள்ளமை சிறப்பம்சமாகும்.
நிஜ பெண்களை போலவே அச்சு அசலாக இந்த பொம்மைகள் இருப்பதால் அவற்றுடன் பொழுதைக் கழிப்பது கவர்ச்சிகரமான நிஜ பெண்ணொருவருடன் பொழுதைக் கழிக்கும் அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதாக ஒறியன்ட் நிறுவனம் கூறுகிறது.
பல்வேறு உருவ அமைப்புகளில் கிடைப்பனவாகும் இந்த பெண் பொம்மைகளின் விலை 1,000 யூரோவாகும். இந்த பொம்மைகள் பாலியல் உறவிற்கும் பயன்படுத்தக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளதால் அதை ஒரு செயற்கை மனைவி என்றே இந்த நிறுவனம் அழைக்கிறது.
ஜப்பானிய இளம் ஆண்கள் இந்த செயற்கை மனைவியை விரும்பி வாங்கிச்செல்வதாகவும் கூடிய விரைவில் இந்த பொம்மைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இருப்பதாகவும் ஒரியன்ட் இன்டஸ்றி நிறுவனம் தெரிவிக்கிறது.
மருதாணி போடாததால் ரத்தானது திருமணம்
இந்தியாவின் ஹைதராபாத்தைச் சேர்ந்த மீர் மசூத் அலி என்பவருக்கும் ஹைதராபாத்தைச் சேர்ந்த முகமது கவுஸ் பாஷா என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 9ஆம் திகதி திருமணம் நடக்க ஏற்ப்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில்கடந்த 7 ஆம் திகதி மணமகன் மணமகளை பார்க்க அவள் வீட்டிற்கு சென்றிருந்தார் அப்போது மணமகள் தனது கைகளில் மருதாணி வைத்து கொள்ளாமையினால் தமது திருமணத்தை நிறுத்துமாறு மணமகன் கோபமாக தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மணமகள் வீட்டார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததுடன்,பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் மணமகளின் வீட்டார் மணமகன் கேட்ட வரதட்சணையை ஏற்கனவே கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.