ஆயு­த­மு­னையில் மகனை பண­ய­மாக வைத்­ துக்­கொண்டு தாயை அழைத்த கொள்­ளை­யர்கள் வீட்­டி­லி­ருந்த தங்க நகை­க­ளையும் கடைக்குள் இருந்த பொருட்­க­ளையும் கொள்ளை அடித்­துக்­கொண்டு தப்­பிச்­சென்­றுள்­ளனர்.

கிளி­நொச்சி திரு­மு­றி­கண்­டி­யி­லுள்ள சேரமான் களஞ்­சியம் என்னும் கடையில் கடந்த செவ்­வா­ய்க்­கி­ழமை நள்­ளி­ரவு இடம்­பெற்ற இச் சம்­பவம் தொடர்­பாக மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

சம்­பவ தினத்­தன்று நள்­ளி­ரவு கடையின் கதவை உடைத்­துக்­கொண்டு வீட்­டிற்குள் உள்­நு­ழைந்த கொள்­ளை­யர்கள் கடைக்குள் உறங்­கிக்­கொண்­டி­ருந்த மகனை கத்­தி­யைக்­காட்டி அச்­சு­றுத்தி குறித்த கடைக்கு அரு­கி­லுள்ள வீட்­டி­லி­ருந்த தாயை அழைத்­துள்­ளனர்.

நள்­ளி­ரவு நேரம் கடையில் படுத்­தி­ருந்த மகன் அழைக்கும் குரல் கேட்டு கடைக்கு சென்ற தாயிடம் மகனின் கழுத்தில் கத்­தியை வைத்து கொலை செய்­யப்­போ­வ­தாக கொள்­ளை­யர்கள் பய­முறுத்­தி­யுள்­ளனர்.

மேலும் வீட்டில் வைத்­தி­ருக்­கின்ற நகை­களை எடுத்­து­வ­ரு­மாறும் அச்­சு­றுத்­தி­யுள்­ளனர்.

குறித்த தாயார் தங்­க­ளிடம் நகைகள் இல்­லை­யென தெரி­வித்­ததைத் தொடர்ந்து வீட்­டிற்கு தாயையும் மக­னையும் கத்தி முனையில் இழுத்துச் சென்ற கொள்­ளை­யர்கள் அவ்­வீட்டில் சல்­லடை போட்டுத் தேடி­யுள்­ளனர். இதன்­போது சுமார் நாலரைப் பவுண் நிறை­யு­டைய தங்கச் சங்­கி­லிகள் இரண்டு மற்றும் காப்பு ஆகிய தங்க நகை­களை கொள்­ளை

­யர்கள் எடுத்­துள்­ளனர். அத்­துடன் மீண்டும் கடைக்குச் சென்ற கொள்­ளை­யர்கள் கடை­யி­லி­ருந்த கைய­டக்­கத்­தொ­லை­பேசி மீள்­நி­ரப்பு அட்­டைகள், சிகரெட், பிஸ்­கட்­டுக்கள் போன்ற சுமார் இரண்­டரை இலட்சம்ரூபா பெறு­ம­தி­யான பொருட்­க­ளையும் கொள்­ளை­ய­டித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் பொன்னம்பலம் கெங்காதரன் என்பவர் முறைப்பாட்டினைப் பதிவு செய்துள்ளார்.

Share.
Leave A Reply