பூலோகம் படத்திற்காக நடிகை த்ரிஷா, உடல் முழுவதும் டாட்டூ குத்திக்கொண்டிருக்கும் ரகசியம் தற்போது வெளிவந்துள்ளது.
ஜெயம் ரவியின் பாக்ஸிங் உருவங்களை உடல் முழுவதும் டாட்டூ குத்த வேண்டும் என்று இயக்குனர் கூறியபோது தற்காலிக டாட்டூதானே என முதலில் சம்மதம் தெரிவித்த த்ரிஷாவுக்கு பின்னர்தான் தெரிந்தது உடலின் முக்கிய பாகங்களிலும் டாட்டூ குத்த வேண்டும் என்பது.
இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் த்ரிஷாவின் தொடை, மார்பின் கீழ்பகுதி போன்ற விவகாரமான பகுதிகளிலும் டாட்டூ குத்த வேண்டும் என வற்புறுத்தியதால் ஒரு சிறு கலகமே ஏற்பட்டுள்ளது. பின்னர் ஜெயம் ரவியின் சமாதானத்திற்கு பின்னர் த்ரிஷா டாட்டூ குத்த சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது.
த்ரிஷாவின் உடலில் உள்ள டாட்டுக்கள் முழுவதையும் பார்த்துவிட வேண்டும் என்பதுதான் ஜெயம் ரவியின் ஆசையாம். ஆனால் அவ்வப்போது ஒருசில டாட்டுக்களை பார்க்கும் ஜெயம் ரவி, மொத்த டாட்டுக்களையும் பார்த்தாரா இல்லையா? என்பதுதான் கிளுகிளுப்பான சஸ்பென்ஸ் என்று கூறுகிறார் இயக்குனர்.
முதலில் ஒரு துணை நடிகைக்கு டாட்டூ குத்தி பார்த்து அது அழிகிறதா? என்று சோதனை செய்த பின்னரே தனக்கு டாட்டூ குத்த சம்மதம் தெரிவித்துள்ளார் த்ரிஷா.
உடலின் அனைத்து இடங்களிலும் டாட்டூ குத்த மூன்று மணிநேரம் ஆனதாம். அதுவரை பொறுமையாக ஒத்துழைப்பு கொடுத்த த்ரிஷாவுக்கு தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார் இயக்குனர் கல்யாண சுந்தரம்.
Actress Oviya Exclusive Interview