‘எபோலா’ உயிர்­கொல்லி வைரஸ் உலகம் முழு­வ­திலும் உள்ள மக்­க­ளி­டத்தில் மிகப் பெரும் பீதியை ஏற்­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கி­றது. இதனால் இன்று வரையில் சுமார் 900க்கும் அதி­க­மானோர் பலி­யா­கி­யுள்­ளனர்.

இந்த வைரஸ் முதலில் 1976ஆம் ஆண்டு பரவ ஆரம்­பித்­துள்­ளது. அதனால் ஆயி­ரக்­க­ணக்­கான மக்கள் இறந்­துள்­ளார்கள். இந்த வைரஸை கட்­டுப்­ப­டுத்த முடி­யுமே தவிர இதனை அடி­யோடு அழித்­து­விட முடி­யாது.

Ebola-virus-2இது எயிட்ஸை விட பல மடங்கு பேரா­பத்து தரக்­கூ­டிய வைர­ஸாகும் என மருத்­து­வர்கள் கூறு­கின்­றனர். 1976ஆம் ஆண்டு இந்த வைரஸ் சியா­ரா­லியோன் மற்றும் சூடான் நாட்டில் பர­விய போது தொற்­றுக்குள்­ளா­கிய அனை­வரும் இறந்­து­போ­னார்கள்.

இதன் பின்­னரே இதனைப் பர­வ­வி­டாமல் தடுத்து, ஒரு கட்­டுப்­பாட்­டிற்குள் கொண்­டு­வந்­துள்­ளார்கள். ஆனால் இத்­தனை ஆண்­டுகள் கழித்து அது மீண்டும் எவ்­வாறு  பரவ ஆரம்­பித்­துள்­ளது என்­பது  ஆய்­வுக்­கு­ரிய விட­ய­மாக மாறி­யுள்­ளது.

ஏனெனில் இந்த வைரஸ் ஒரு­வரை தாக்­கினால், அவர் 7 அல்­லது 8 நாட்­களில் நிச்­சயம் உயி­ரி­ழந்­து­வி­டுவார் என வைத்­திய நிபு­ணர்கள் கருத்து தெரி­விக்­கின்­றனர்.

அப்­ப­டி­யென்றால், இந்த வைரஸ் தாக்­கிய நபர்கள் அல்­லது அனைத்து விலங்­கு­களும் இறந்­தி­ருக்­க­வேண்டும் அல்­லவா? இப்­போது எப்­படி மீண்டும் அந்த வைரஸ் உயிர் பெற்­றது என்று மருத்­து­வர்கள் குழம்பிப் போயி­ருக்­கின்­றனர்.

எபோ­லாவின் பூர்­வீகம்

ஆபி­ரிக்க நாடான கொங்­கோவில் உள்ள எபோலா ஆற்றின் கரை­யோர கிராமம் ஒன்றில், 1976 ஆம் ஆண்டு இந்நோய் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளதால், அந்த ஆற்றின் பெய­ரையே இந்த வைர­ஸிற்கும் வைத்­துள்­ளார்கள்.

ஆபி­ரிக்க கண்­ட­மா­னது மனி­த­னுக்கு மட்­டு­மல்ல, மனி­தனைக் கொல்லும் பல வைரஸ்­க­ளுக்கும் பிறப்­பி­ட­மாக இருந்­தி­ருக்­கின்­றது. இங்­குள்­ள­வர்கள் குரங்குக் கறி, வௌவால் கறி சாப்­பி­டு­வது இது போன்ற வைரஸ்கள் மனி­தனை தாக்­கு­வ­தற்கு கார­ணமாய் இருக்­கின்­றன என்ற விசித்­திர கார­ணத்தை சில ஆராய்ச்­சி­யா­ளர்கள் முன் வைக்­கின்­றனர்.

குரங்­குகள் இது போன்ற புது­வகை வைரஸ்­களால் பாதிக்­கப்­ப­டு­கின்­றன. அதே இன வரி­சையில் வரும் மனி­த­னுக்கும் இவை எளி­தாகப் பர­வு­கின்­றது. இந்த எபோலா வைரஸ் பரப்­பு­வதில் பழம் தின்னி வௌவால்கள் முக்­கிய பங்கு வகிக்­கின்­றன.

இதில் ஆச்­ச­ரி­ய­மான விடயம் என்­ன­வென்றால், அந்த வௌவால்­க­ளுக்கு இந்த வைர­ஸினால் பாதிப்பு எதுவும் உண்­டா­வ­தில்லை. அது எப்­படி என்பதற்கான கார­ணங்கள் கண்­ட­றி­யப்­ப­டும்­போது இதற்கு தடுப்பு மருந்து எதுவும் கண்­டு­பி­டிக்­கப்­ப­டலாம்.

ஆனால், இன்­று­வரை இதற்கு மருத்­துவம் எதுவும் கண்­டு­பி­டிக்­கப்­ப­ட­வில்லை. இன்று மீள் உரு­வெ­டுத்­தி­ருக்கும் எபோலா உயிர்­கொல்லி வைர­ஸா­னது பற­வை­யி­லி­ருந்து தொற்­றி­யி­ருக்­கலாம் என்று நம்­பப்­ப­டு­கி­றது.

ஆபி­ரிக்க நாடான நைஜீ­ரி­யாவில் தான் இதன் தாக்கம் முதலில் தொடங்­கி­யுள்­ளது. இது­வ­ரையில் சுமார் 900 பேர் இக் கொடிய வைரஸ் நோயினால் பலியா­கி­யுள்­ளனர்.

இது இவ்­வா­றி­ருக்க, இந்த வைரஸ்   படு வேக­மாக பரவி வரு­கி­றது. இன்னும் சில தினங்­களில்   இது சுமார் 30,000 பேருக்கு பரவ வாய்ப்­புள்­ள­தாக தெரிவித்­துள்ள  பிரித்­தா­னியா, தமது  பாது­காப்பு சபையைக் கூட்டி, இந் நோய் பிரித்­தா­னி­யாவை  தாக்­கினால் என்ன செய்­வது என்று ஆராய்ந்­துள்­ளது.

உலகில்  உள்ள மக்கள் பலர் தமது விடு­மு­றைக்­காகப் பயணம் மேற்­கொண்டு வரும் நிலையில், இந்த வைரஸ் படு­வே­க­மாகப் பரவும் வாய்ப்­புள்­ளது. நைஜீ­ரிய நாட்டின் அனைத்து எல்­லை­க­ளையும் அண்­டைய நாடுகள் கால­வ­ரை­யறை இன்றி மூடி­யுள்­ளன. ஆனால் அதற்கு முன்­னரே இந்த நோய் பல நாடு­க­ளுக்குப் பர­வி­யுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

நோயின் அறி­குறி மற்றும் விளைவு

“எபோலா” வைரஸ் ஒரு­வ­ருக்குத் தொற்றி முதல் 21 நாட்­களில் திடீர் காய்ச்சல், பல­வீனம், தசை நோவு, தலை­வலி மற்றும் தொண்டை அடைப்பு என்­பன ஏற்­படும் எனவும் இந்த அறி­கு­றிகள் தவ­று­த­லாக  மலே­ரியா அல்­லது தைபோய்ட் காய்ச்சல் எனக் கரு­தப்­படும் வாய்ப்பு உள்­ளது எனவும், மருத்­து­வர்கள் எச்­ச­ரித்­துள்­ளனர்.

எனினும், எபோலா வைரஸ் தொற்று முற்றும் கட்­டத்தில் வாந்தி, வயிற்றுப் போக்கு, சிறு­நீ­ரக மற்றும் ஈரல் செயல் இழப்பு, உள்­ளக மற்றும் வெளிப்­புற இரத்த கசிவு என்­பன ஏற்­படும் எனவும் இந்த அறி­கு­றிகள் ஏற்­படும் நபர் உயிர் பிழைப்­பது அரிது என்றும் கூறப்­ப­டு­கி­றது.

இதே­வேளை, ஆரம்ப கட்ட அறி­கு­றிகள் தெரியும் பட்­சத்தில் பல்­வே­று­பட்ட 5 மருத்­துவப் பரி­சோ­த­னை­க­ளுக்குப் பின்­னரே எபோலா தாக்­கி­யி­ருப்­ப­தாக உறு­தி­யாகக் கூற­மு­டியும் என மருத்­து­வர்கள் தெரி­வித்­தி­ருப்­பதும் குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

இந்த நோயின் தாக்­கத்­துக்­குள்­ளா­ன­வர்கள் மிகவும் பரி­தா­ப­க­ர­மான முறையில் இறக்­கின்­றார்கள். இந்த வைரஸ் நரம்பு மண்­ட­லத்தை தாக்­கு­கி­றது. முக்­கிய நரம்­பு­களை தாக்கி, வெளிப்­புற தோலில் கோரை­களை (துவா­ரங்­களை) உண்­டாக்­கு­கி­றது. தோல் பழு­த­டைந்து தசைகள் தொங்­கிப்போய், வய­தா­ன­வர்கள் போல தாம் உருமாறிய பின்­னரே உயி­ரி­ழப்பர் என மருத்­து­வர்கள் கூறு­கின்­றனர்.

செய்யக்கூடாதவை

1. எபோ­லாவால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களைத் தொடுதல் கூடாது. எபோ­லாவால் இறந்­த­வர்­க­ளையும் தொடக்­கூடாது.

2. எபோலா நோயால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் உடைகள், படுக்­கை­க­ளைக்­கூட தொடக்­கூ­டாது.

3. எபோலா நோயால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் எச்சில், குடித்து வைத்த தண்ணீர், உணவு என்று எதையும் தொடக்­கூ­டாது. அவர்­க­ளது இரத்தம், சிறுநீர், மலம் என்று எதுவும் நம் உடல் மீது பட்­டு­வி­டக்­கூ­டாது.

4. வௌவால்கள் கடித்த பழங்கள் எதையும் சாப்­பி­டக்­கூ­டாது.

5. குரங்­கு­க­ளுடன் விளை­யா­டு­வது, தொடு­வது கூடாது. குரங்கு மாமிசம் கூடாது.

6. எபோலா நோயினால் இறந்­த­வர்­க ளின் சடலத்தை புதைக்காது எரித்தல் வேண்டும்.

ஆகையினால் மிகவும் அவதானமாக இந் நோய் தொற்றுக்குள்ளானவர்களோடு பழக வேண்டும். இயன்றளவில் அவர்களை தனிமையில் வைத்து சிகிச்சை வழங்கப்படுதல் வேண்டும். இதன் மூலம் இந் நோய் தொற்றிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

நோய் பர­வலும் பலி­யா­ன­வர்­களின் எண்­ணிக்­கையும்

மேற்கு ஆபி­ரிக்க நாடு­களில் ‘எபோலா (Ebola) வைரஸ்’ வேக­மாக பரவி வரு­கி­றது. மேற்கு ஆபி­ரிக்­காவில் எபோலா வைரஸால் அதிகம் பாதிக்­கப்­பட்ட நாடு­க­ளாக குயி­னேயா, சியா­ரா­லியோன் மற்றும் லைபீ­ரியா ஆகிய நாடுகள் விளங்­கு­கின்­றன.

லைபீ­ரி­யாவில் அந்­நாட்டு அதிபர் எல்லென் ஜோன்சன் சிர்லீஃப் அங்­குள்ள அனைத்துப்  பாட­சா­லை­க­ளையும் மூடும்­படி  உத்­த­ர­விட்­டுள்­ளார். இந்த வைரஸ் பாதிப்­பிற்கு மேற்கு ஆபி­ரிக்க நாடு­களில் 30 ஆயி­ரத்­திற்கும் மேற்­பட்டோர் ஆளா­கி­யி­ருக்­கக்­கூடும் என்று நிபு­ணர்கள் கருத்து வெளி­யிட்­டுள்­ளனர்.

எபோலோ தொற்று நோய்க்கு சரி­யான சிகிச்சை இல்­லா­ததால், பன்றிக் காய்ச்­சலைப் போல இது உல­கையே அச்­சு­றுத்தத் தொடங்­கி­யுள்­ளது. இந்தக் கொடிய நோய் தாக்­கி­யதில் இது­வரை சுமார் 900 க்கும் அதி­க­மானோர் உயி­ரி­ழந்­துள்­ளனர்.

இந்த நோய் மற்ற நாடு­க­ளுக்கும் வேக­மாக பரவத் தொடங்­கி­யுள்­ளதால் நோய்த் தடுப்பு  நட­வ­டிக்­கை­களில்  ஈடு­ப­டு­மாறு சர்­வ­தேச நாடு­களை உலக சுகா­தார நிறு­வனம் எச்­ச­ரித்­துள்­ளது. விமான நிலை­யங்­களில் வந்­தி­றங்கும் பய­ணி­க­ளுக்கு இந்நோய் இருக்­கி­றதா என்று பரி­சோ­தனை செய்ய சிறப்பு சுகா­தார குழுக்கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன.

நோயின் தன்மை அதி­க­ரிக்­கும்­ பொ­ழுது தொடக்­கத்தில், காய்ச்சல், வாந்தி, வயிற்­றுப்­போக்கு என ஆரம்­பித்து பின் மூக்கு, வாய், காது என உட­லு­றுப்­பு­களில் இருந்து இரத்தம் கசிய ஆரம்­பிக்கும்.

இந்த வைரஸ் பாதிப்பு கட்­டுப்­ப­டுத்த முடி­யாத அள­விற்கு தீவி­ர­முடன் மனி­தர்­க­ளி­டையே தாக்­கத்தை ஏற்­ப­டுத்தி வரு­வ­துடன் அதனை தடுக்கும் கார­ணி­களை கண்­ட­றி­வ­திலும் தீர்வு காணப்­ப­டாமல் மருத்­துவ உல­கிற்கு ஒரு சவா­லாக இருக்­கி­றது.

கடந்த 2014ஆம் ஆண்டில், கினியா, லைபீ­ரியா மற்றும் சியா­ரா­லியோன் ஆகிய நாடு­களில் 1,201 பேர் பாதிக்­கப்­பட்­டனர். அவர்­களில் 672 பேர் பலி­யா­கி­யுள்­ளனர். கென்யா நாட்டில் 319 பேரும், அதனை தொடர்ந்து  சியா­ரா­லி­யோனில்  224 பேரும் மற்றும் லைபீ­ரியா நாட்டில் 129 பேரும் என மொத்தம்  672 பேர் வைரஸ் பாதிப்பில் பலி­யா­னார்கள் என்று ஐ.நா. உலக சுகா­தார அமைப்பு தெரி­வித்­துள்­ளது.

இன்­றைய நிலை­வ­ரப்­படி உலக சுகா­தாரத் தாப­ன­மான WHO இன் தக­வல்­படி மேற்கு ஆபி­ரிக்க நாடு­க­ளான கினியா, சியா­ரா­லியோன், லைபீ­ரியா மற்றும் நைஜீ­ரியா ஆகிய நாடு­களில் மட்டும் 887 பேர் இத் தொற்று நோயால் பீடிக்­கப்­பட்டும் இதில் 485 பேர் பலி­யா­கி­யுள்­ளனர் எனவும் தெரிய வந்­துள்­ளது. மேலும் உலக அளவில் சுமார் 1323 பேர் எபோலா நோய்த் தொற்­றுக்கு ஆளா­கியும் 729 பேர் பலி­யாகி இருக்­கலாம் என்றும் கணிக்­கப்­பட்­டுள்­ளது.

இலங்­கையில் நோய் பர­வலைத் தடுக்க

உலகம் முழு­வதும் அச்­சு­றுத்­தலை ஏற்­ப­டுத்­தி­வரும் உயிர்­கொல்லி நோயான எபோலா வைரஸ் இலங்­கைக்குள் நுழை­வது, பர­வு­வதைத் தடுக்க விசேட நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டுள்­ள­தாக சுகா­தார அமைச்சு அறி­வித்­துள்­ளது.

இந்த நோய்க்­கான விசேட மருத்­துவ குழுக்கள், சுகா­தாரப் பிரி­வினர் விமான நிலை­யங்­களில் சேவையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர் என்றும் அமைச்சு தெரி­வித்­துள்­ளது. சுகா­தார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவின் பணிப்­பாளர் வைத்­தியர் பபா பலி­க­வ­தன தெரி­வித்தார்.

மேலும் அவர் கூறு­கையில், இந்நோய் தற்­போது ஆக்­கி­ர­மித்­துள்ள கினியா, சியா­ரா­லியோன், லைபீ­ரியா மற்றும் நைஜீ­ரியா ஆகிய நாடு­க­ளி­லி­ருந்து இலங்­கைக்கு சுற்­றுலாப் பய­ணத்தை மேற்­கொண்டு வரு­பவர் மிக அரிது என்றும் இலங்­கைக்கு இந் நோய் ஏற்­ப­டு­வ­தற்­கான வாய்ப்பு கள் மிகக் குறை­டவு என்றும் அவர் தெரி­வித்தார்.

மேலும் இலங்­கைக்குள் இந்நோய் பர­வு­வதை தடுக்கும் நோக்­குடன் கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் பய­ணிகள் வருகை பகு­தியில் விசேட நோய் கண்­டு­பி­டிப்புப் பிரி­வொன்றை ஆரம்­பிக்­கு­மாறு சுகா­தார அமைச்சர் மைத்­தி­ரி­பால சிறி­சேன உத்­த­ர­விட்­டுள்ளார்.

இதன்­படி எபோலா வைரஸ் எமது நாட்­டுக்குள் வரு­வதைத் தடுப்­ப­தற்கு எடுக்­க­வேண்­டிய நட­வ­டிக்­கைகள் தொடர்­பாக விசேட கூட்­ட­மொன்று சுகா­தார சேவைகள் பணிப்­பாளர் நாயகம் டொக்டர் பாலித்த மஹி­பால மற்றும் கட்­டு­நா­யக்க விமான நிலையத் தலைவர் பிர­சன்ன ஜே.விக்­கி­ர­ம­சூ­ரிய தலை­மையில் நடை­பெற்­றுள்­ளது.

இந்தக் கூட்­டத்தில் தொற்­றுநோய்ப் பிரிவின் பணிப்­பாளர், விசேட வைத்­திய நிபுணர் பபா பலி­க­வர்­தன, விமான நிலைய நோய்த்­த­டுப்பு பணிப்­பாளர் எல்.பி.தேனு­வர, தொற்று நோய் ஆய்வுப் பிரிவு நிபுணர், விமான நிலைய சுகா­தார பிரிவு அதி­கா­ரிகள், சுகா­தார பரி­சோ­த­கர்கள் உட்­பட விமான நிலைய உயர் அதி­கா­ரி­களும் கலந்து கொண்­டனர்.

எபோலா வைரஸ் தொற்­றி­யுள்ள பய­ணிகள் இலங்­கைக்குள் ஊடாக ஊடு­ரு­வு­கின்­ற­னரா என்­பதை 24 மணி நேரமும் கண்­கா­ணிக்­கக்­கூ­டி­ய­வாறு அவ­சர நட­வ­டிக்கைப் பிரிவு ஒன்றை உன­டி­யாக ஏற்­ப­டுத்­து­மாறும் சிகிச்­சைகள் வழங்­கு­வ­தற்கு ஏது­வாக வைத்­தி­யர்­க­ளுக்குத் தேவை­யான தடுப்பு மருந்­து­களையும் உட­ன­டி­யாக வழங்­கு­மாறும் சுகா­தார அமைச்சர் தெரி­வித்­துள்ளார்.

ஆபி­ரிக்­கா­வி­லி­ருந்து சுற்­றுலாப் பய­ணி­யொ­ருவர் இலங்­கைக்கு வரு­வா­ரே­யானால் அவர் தொடர்­பான சகல விப­ரங்­க­ளையும் பதிவு செய்து தொடர்ந்து மூன்று வார­மாக அவர் செல்லும் இடங்கள், தங்­கு­மிடம், அவர்­க­ளு­டைய நட­வ­டிக்கை குறித்து கண்­கா­ணிக்க வேண்­டு­மென்றும் இந்தக் கூட்­டத்தின் போது தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

ஆபி­ரிக்­கா­வி­லி­ருக்கும் இலங்­கை­யர்­களை வர­வ­ழைத்தல்

ஆபி­ரிக்­காவில் பர­வி­வரும் எபோலா வைரஸ் கார­ண­மாக லைபீ­ரி­யாவில் இருக்கும் இலங்­கை­யர்­களை உட­ன­டி­யாக நாட்­டுக்கு அழைத்­து­வர நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.

அத்­தோடு லைபீ­ரி­யா­வுக்கு இலங்கை பணி­யா­ளர்­களை அனுப்பும் நட­வ­டிக்­கை யும் இடை நிறுத்­தப்­பட்­டுள்­ள­தாக வெளி­நாட்டு வேலை வாய்ப்பு ஊக்­கு­விப்பு மற்றும் நலன்­புரி அமைச்சர் டிலான் பெரேரா தெரி­வித்­துள்ளார்.

லைபீ­ரி­யாவில் சுமார் 200 இலங்கை பணி­யா­ளர்கள் இருப்­ப­தா­கவும் அமைச்சர் குறிப்­பிட்­டுள்ளார். அவர்­களை உற­வினர் கள் ஊடாக நாட்­டுக்கு திருப்பி அழைப்­ப­தற்­கான ஒழுங்­கு­களை செய்­து ­வ­ரு­வ­தாக அமைச்சர் டிலான் பெரேரா மேலும் தெரி­வித்­துள்ளார்.

Share.
Leave A Reply