அத்துரலிய ரத்ன தேரரின் போராட்டத்திற்கு  24 மணித்தியாலத்திற்கும் நியாயம் கிடைக்க வேண்டும்.  இந்த விடயத்தில் அரசாங்கம் ஒருதலை பட்சமாக  செயற்பட்டால் நாடு  தழுவிய ரீதியில்  பௌத்த பிக்குகள் போராட்டத்தை  முன்னெடுக்க நேரிடும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

 

தொடர் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டுள்ள  அத்துரலியே  ரத்ன தேரரை   சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

IMG-20190602-WA0015

தொடர்   உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துள்ள  அத்துரலியே ரத்ன  தேரரின்  கோரிக்கைகளை  ஜனாதிபதியும்,  பிரதமரும் மீள் பரிசீலனை  செய்ய வேண்டும்.

பிரச்சினைகளை பெரிதுப்படுத்தாமல்  நடுநிலையாக  செயற்படுவது அவசியம்.   அத்துரலிய தேரரின் போராட்டத்திற்கு  பொதுபல சேனா  அமைப்பு முழுமையான ஆதரவு வழங்கும் .

அமைச்சர்  ரிஷாத் பதியூதீன்,  கிழக்கு  மாகாண ஆளுநர்  ஹிஷ்புல்லாஹ், மேல்மாகாண ஆளுநர் அசாத்சாலி ஆகியோரை பதவி  விலக்க கோரி  பல்வேறு தரப்பினர் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்தும்  அரசியல் காரணிகளினால் அவை பயனற்றதாகி விட்டது.  தொடர்ந்து இந்நிலைமையினை முன்னெடுத்து செய்ய இடமளிக்க முடியாது.

அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பில் பல்வேறு  வேறுப்பாடுகள் காணப்படுகின்ற  பட்சத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை இல்லாதொழிக்கும் போராட்டத்திற்கு   அனைவரும் ஒன்றினைய வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

Share.
Leave A Reply