என் மீது சுமத்தப்பட்டுள்ள பத்து குற்றச்சாட்டுக்களும் எந்த விதமான அடிப்படைகளும் அற்றவை. இது நியாயத்துக்கும் இனவாதத்துக்கும் இடையிலான போட்டி. இதில் எது வெல்கிறது என்று பார்ப்போம்.
இந்தப் பதவி பகட்டு எல்லாம் எங்களுக்கு தூசு. ஆனால் யாரோ சொல்கிறார்கள் என்று ஓட நாங்கள் தயாரில்லை என்று அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது. இது குறித்து கேட்டபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது, என்னிடம் ஜனாதிபதியோ அல்லது வேறு யாருமோ அழுத்தங்கள் வழங்கவில்லை. பதவி விலகும் அளவுக்கு நான் என்ன தவறு செய்தேன் என்று கேட்கிறேன்.
என்மீது வைக்கப்பட்டுள்ள பத்து குற்றச்சாட்டுக்கள் எந்த அடிப்படையும் அற்றவை. நம்பிக்கையில்லா பிரேரணை நியாயத்துக்கும் இனவாதத்துக்கும் இடையிலான போட்டி. அதில் எது வெல்கிறது என்று பார்ப்போம்.
இன்று எனது சமூகத்தின் மீது அடக்குமுறை மேற்கொள்ளப்படும் போது என்மீது வன்மங்கள் பிரயோகிக்கப்படும் போது இந்தப் பதவி பட்டங்கள் எங்களுக்கு பெரிதல்ல. அதைதூக்கி வீசிவிட்டு செல்வதும் எங்களுக்கு பெரிதல்ல.
ஆனால் யாரோ சொல்கிறார்கள் என்று நான் ஏன் பதவி விலக வேண்டும். நான் ரணிலின் முகவரும் அல்ல. மைத்திரியின் முகவரும் அல்ல.
அவர்கள் வரச்சொல்லும் போது வரவும் போகச் சொல்லும்போது போகவும் நாங்கள் ஒன்றும் அவர்களின் அடியாட்கள் அல்ல.
இன்று அடிமைப்பட்ட நிலையிலுள்ள மக்களின் குரலான எம்மை எந்தவொரு காரணமும் இல்லாமல் போகச் செல்வது தார்மீகமானதா என்று நான் கேட்கிறேன்.
எமது கட்சி இன்று திங்கட்கிழமை கூடவுள்ளது. அதில் இப்போதைய நிலைமைகள் குறித்து கட்சி ஆராயும் என்றார்.