ஜப்பானின் ரயில்களில் இளம்பெண்களிடம் தவறாக நடந்து கொள்வது ஒரு பெரும் பிரச்சினையாகியுள்ள நிலையில், இரண்டு மாணவிகள் தங்களிடம் தவறாக நடந்து கொண்ட ஒரு நபரை துரத்தி துரத்தி அடிக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவில் இரண்டு மாணவிகள் கோட் சூட் அணிந்த ஒரு நபரை ரயில் நிலையம் ஒன்றில் துரத்தியபடி ஓடுவது தெரிகிறது.
அவர்களிடமிருந்து அந்த நபர் தப்பியோட முயல, ரயிலுக்கு காத்திருக்கும் பயணி ஒருவர் அந்த மாணவிகளுக்கு உதவியாக, காலை குறுக்கே நீட்டி அந்த நபரை விழச் செய்கிறார்.
பின்னர் படிக்கட்டில் இறங்கி ஓடிய அந்த நபரை விடாமல் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்திருக்கிறார்கள் அந்த தைரியசாலி மாணவிகள்
அந்த நபர் ரயிலில் தங்களுடன் பயணிக்கும்போது தங்கள் மார்பகங்களை பிடித்ததாக பொலிசாரிடம் புகாரளித்தனர் அந்த மாணவிகள்.
மைனர் மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
2001ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின்படி, டோக்கியோவில், உயர்நிலைப் பள்ளி மாணவிகளில் மூன்றில் இரண்டு பங்கு மாணவிகள், ரயில்களில் தவறாக தொடப்படுவதாக தெரியவந்துள்ளது.