* தாக்குதலின் அனைத்து விடயங்களும் இந்தியாவுக்குத் தெரியும்.

* கோத்தா தேர்தலில் களமிறங்கமாட்டார்

* அபுதாபி புலனாய்வு அதிகாரிகள் திருப்பி அனுப்பப்பட்டது ஏன்?

தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்­புக்கும், முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­பாய ராஜபக் ஷவிற்கும் நெருங்­கிய தொடர்பு இருந்­த­தா­கவும் முஸ்­லிம்­களை பிரிக்க வேண்டும் என்ற நோக்­கத்­துக்­கா­கவே கோத்­த­பாய ராஜபக் ஷ தேசிய தௌஹீத் ஜமா­அத்­துடன் நெருக்­க­மான தொடர்பை பேணி வந்­த­தா­கவும் மேல் மாகா­ணத்தின் முன்னாள் ஆளுநர் அஸாத் சாலி பர­ப­ரப்­பான தக­வல்­களை வெளி­யிட்­டுள்ளார்.

ஜனா­தி­பதித் தேர்­தலில் கோத்­த­பாய ராஜபக் ஷ கள­மி­றங்­கப்­போ­வ­தில்லை எனவும் அவ­ருக்கு பதி­லாக பசில் ராஜபக் ஷவே கள­மி­றங்­குவார் எனவும் அவர் தெரி­வித்தார்.

இதே­வேளை, எதிர்­வரும் தேர்­தலில் முஸ்லிம் பிர­தி­நி­திகள் அனை­வரும் ஒன்­றி­ணைந்து ஒரு கூட்­ட­ணி­யாக கள­மி­றங்க ஆலோ­சித்து வரு­வ­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.

மேலும், இலங்­கையில் நடத்­தப்­பட்ட தாக்­குதல் சம்­ப­வத்தின் அனைத்து விட­யங்­களும் இந்­திய அர­சாங்­கத்­துக்கு தெரியும். சம்­பவம் தொடர்­பி­லான சகல உண்­மை­க­ளையும் இந்­திய அர­சாங்கம் விரைவில்  வெளிப்­ப­டுத்தும் எனவும் கூறினார்.

அந்த செவ்­வியின் முழு வடிவம் வரு­மாறு,

கேள்வி: இலங்­கையில் தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பு குறித்தும் அதன் செயற்­பா­டுகள் குறித்தும் நீங்கள் அறிந்­தி­ருந்­தீர்­களா?

நிச்­ச­ய­மாக. 1994 ஆம் ஆண்­டி­லி­ருந்து  தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பு  ஒரு புற்று நோயை போன்று எம்மை தொற்­றிக்­கொண்­டது.

இதற்கு எதி­ராக ஆரம்­பத்­தி­லி­ருந்தே குரல்­கொ­டுத்தோம். 94 ஆம் ஆண்டு காலப்­ப­கு­தியில் தமிழ் நாடு தௌஹீத் ஜமா­அத்தின் நிறு­வுனர் பி.ஜெய்னுல் ஆப்தீன் இலங்­கைக்கு வந்து கிழக்கு மாகா­ணத்தில் பல அநி­யா­யங்­களை செய்தார்.

உட­ன­டி­யாக இந்த பி.ஜெய்னுல் என்ற விஷம் கொண்ட நபரை அப்­போ­தைய ஆளுநர் அலவி மௌலா­னா­வுடன் சேர்ந்து நாடு கடத்­தினோம். இதை வெளிப்­ப­டை­யாக கூற நான் அஞ்­ச­மாட்டேன்.

இதன் பின்னர் பி.ஜெய்னுல் ஆப்தீன் இலங்­கைக்கு வரு­வ­தற்­காக நான்கு முறை முயற்­சித்­துள்ளார். தற்­போது 5ஆவது முறை­யா­கவும் இலங்­கைக்கு வர முயற்­சி­களை மேற்­கொண்­டுள்­ள­தாக அறிய வந்­துள்­ளது.

அதா­வது மருத்­துவ தேவைக்­காக இலங்கை வரு­வ­தற்கு அவர் விண்­ணப்­பித்­துள்ளார். இந்­தி­யாவில் இல்­லாத மருத்­துவ வச­தியா இலங்­கையில் உள்­ளது?. ஏற்­க­னவே தமிழ்­நாட்டை நாச­மாக்­கிய பி.ஜெய்னுல் ஆப்தீன், எமது மக்­களின் நிம்­ம­தி­யையும் கெடுத்­து­விட்டார்.

இவரின் செயற்­பாடு முற்­றிலும் ஆபத்­தா­னது. இவரால் தமி­ழாக்கம் செய்­யப்­பட்ட குர்­ஆனே தற்­போது சிங்களத்தில் மொழி பெயர்க்­கப்­பட்டு மஹிந்த ராஜபக் ஷ, கோத்­த­பாய ராஜபக் ஷ மற்றும் உதய கம்­பன்­பில போன்­றோ­ரிடம் கொடுக்­கப்­பட்­டுள்­ளது.

கேள்வி: நாட்டில் ஏற்­பட்ட முழு பிரச்­சி­னைக்கும்  தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பே காரணம் என நீங்கள் கரு­து­கின்­றீர்­களா?

ராஸிக்கை ஏன் கைது செய்­ய­வில்லை

ஆம். சகல பிரச்­சி­னை­க­ளுக்கும் இவர்­களே காரணம். இதனை அனை­வரும் ஏற்­றுக்­கொள்ள வேண்டும். இவர்­களின் கார­ண­மாக பள்­ளி­வா­சல்­க­ளுக்­குள்ளும்  இன்று பிரச்­சி­னைகள் ஏற்­பட்­டுள்­ளன.  தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்­பினுள் இருந்த உட்­பூ­சல்கள் கார­ண­மாக பல பிரி­வு­க­ளாக இவர்கள் பிரிந்­தார்கள்.

பிரிந்து ஒவ்­வொரு இடங்­க­ளிலும் காணி, கட்­டி­டங்­களை வாங்­கி­னார்கள். இதற்­கெல்லாம் எங்­கி­ருந்து பணம் வந்­தது என்று தெரி­ய­வில்லை.

தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்­பி­லி­ருந்து பிரிந்து சென்று உரு­வா­கிய என்.டி.ஜே., எஸ்.டி.ஜே., சி.பி.ஜே. எஸ்.எல்.டி.ஜே என ஒவ்­வொ­ரு­வரும் ஒரு­வரை ஒருவர் குற்றம் சுமத்தி கொண்­டி­ருக்­கின்­றார்கள். பாரம்­ப­ரி­ய­மாக சிங்­கள மக்­க­ளோடு ஒற்­று­மை­யாக வாழ்ந்து வந்த வாழ்க்­கையை சித­ற­டித்­துள்­ளார்கள்.

 சிலோன் தௌஹீத் ஜமா­அத்தின் பொதுச்செ­ய­லாளர் அப்துல் ராஸிக்கை ஏன் கைது செய்­ய­வில்லை. அப்துல் ராஸிக்கும் அர­சாங்­கமும் ஒன்­றாக இணைந்தே வேலை செய்­கின்­றார்கள்.

கேள்வி: குறித்த அமைப்­பினர் நாட்­டுக்கு அச்­சு­றுத்தல் ஏற்­ப­டுத்தும் வகையில் செயற்­ப­டு­வது தொடர்பில் சம்­பந்­தப்­பட்ட  அரச அதி­கா­ரிகள் பாது­காப்புத் தரப்­பி­ன­ருக்கு அறி­வித்­தீர்­களா?

94 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்­சி­யாக அறி­வு­றுத்தி வந்தோம். இதன் பின்னர் 2017 ஆம் ஆண்டு மார்ச் 14 ஆம் திகதி சஹ்­ரானை உட­ன­டி­யாக கைது செய்­யு­மாறு பகி­ரங்­க­மாக ஊட­க­வி­ய­லாளர்

சந்­திப்பின் மூலம் கோரிக்கை விடுத்தேன். ஆனால், இவரை கைது செய்­யா­ம­லி­ருந்­தது அர­சாங்­கத்தின் தவறு. சஹ்ரான் தொடர்பில் யாரும் அறிந்­தி­ருக்­க­வில்லை என அர­சாங்­கத்தில் இருக்கும் யாராலும் கூற முடி­யாது. ஜனா­தி­ப­தியும் இதனை அறிந்து வைத்­தி­ருந்தார்.

தாக்­கு­த­லுக்கு முதலில் ஆல­யங்­களே இலக்கு

கேள்வி:  குறித்த அமைப்­பி­னரால் உங்­க­ளுக்கு அச்­சு­றுத்தல் ஏதேனும் விடுக்­கப்­பட்­டதா?

அச்­சு­றுத்தல் இருக்­கின்­றது. ஆனால், பொலி­ஸாரால் எவ்­வித பாது­காப்பும் வழங்­கப்­ப­ட­வில்லை. நாங்கள் பாரம்­ப­ரி­யத்தை கொண்ட முஸ்லிம் இனத்­த­வர்கள். 21 ஆம் திகதி நடத்­தப்­பட்ட தற்­கொலை குண்டுத் தாக்­கு­தலில் முதலில் ஆல­யங்­களே இலக்கு வைக்­கப்­பட்­டன. இதன் பின்­ன­ணியில் சர்­வ­தேச உள்­ளீடு இருக்­கின்­றதா என்­பதை அனை­வரும் சிந்­தித்து பார்க்க வேண்டும்.

ஐ.எஸ்.ஐ.எஸ். என்­பது ஒரு பிச்­சைக்­கார இயக்கம். இந்த இயக்­கத்தின் பெயரை வைத்­துக்­கொண்டு யார் பின்­ன­ணியில் செயற்­ப­டு­கின்­றார்கள் என்­பதை அனை­வரும் சிந்­தித்து பார்க்க வேண்டும்.

மேலும் இது­தொ­டர்பில் ஆழ­மான விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்க வேண்டும். ”21 ஆம் திகதி நடத்­தப்­பட்ட தாக்­கு­த­லுக்கும் முஸ்­லிம்­க­ளுக்கும்  எவ்­வித தொடர்பும் இல்லை.

இது­வொரு இர­க­சிய உடன்­பா­டு­க­ளுடன் மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­குதல்” என கர்­தினால் மெல்கம் ரஞ்­ஜித்தும் கூறி­யி­ருந்தார்.

1915 ஆம் ஆண்டு சிங்­கள, முஸ்லிம் மக்கள் இடையே கல­வரம் ஒன்று ஏற்­பட்­டது. இதன் 100 வருட பூர்த்­தியை 2015 ஆம் ஆண்டு கொண்­டா­டுவோம் என 2014 ஆம் ஆண்டு ஊட­கங்­களின் முன்­பாக உதய கம்­பன்­பில தெரி­வித்­தி­ருந்தார்.

ஆனால், ஆட்சி மாறி­யதால் இவர்­களால் அதனை செய்ய முடி­யாமல் போய்­விட்­டது. தற்­போது இந்த தாக்­குதல் சம்­ப­வத்தை சாத­க­மாக்கிக் கொண்டே அண்­மையில் முஸ்லிம் சொத்­துக்­க­ளுக்கு சேதம் விளை­விக்­கப்­பட்­டன. இதில் உதய கம்­பன்­பி­லவின் தேசிய அமைப்­பா­ளரும் உடன்­பட்­டுள்ளார். ஆனால் அர­சாங்கம் அவரை கைது செய்­ய­வில்லை.

அப்துல் ராஸிக்கை கைது செய்­யா­தது போன்றே மது மாதுவ அர­விந்­தையும் அர­சாங்­கத்தால் கைது செய்ய முடி­யாமல் போனது. இவர்கள் பாது­காப்பு தரப்பின் இர­க­சிய புல­னாய்வுப் பிரிவை சேர்ந்­த­வர்­களா? என்ற கேள்வி மக்கள் மத்­தியில் உள்­ளது.

கேள்வி:  இந்த தாக்­குதல் சம்­ப­வத்தின் பின்­ன­ணியில் ஒப்­பந்தம் இருக்­கின்­றது எனவும், சர்­வ­தேசம் இருக்­கின்­றது எனவும் சுட்­டிக்­காட்­டினீர்கள். இதே­வேளை இலங்­கையில் நடத்­தப்­பட்ட தாக்­கு­தலின் பின்னர் ஐ.எஸ் அமைப்பை ஒழிப்­ப­தற்கு மேற்­கு­லக நாடுகள் கூட்­டாக முன்­வந்­துள்­ளன. இதனை எவ்­வாறு பார்க்­கின்­றீர்கள்?

இலங்­கைக்கு யாரும் உதவி செய்­யலாம். இலங்­கையில் தாக்­குதல் இடம்­பெற்று முடிந்­த­வுடன்  முதன் முத­லாக எப்.பி.ஐ என அறி­யப்­படும் அமெ­ரிக்க பொலிஸ் அமைப்­பான ‘பெடரல் பீரோ ஆப் இன்­வெஸ்­டி­கேஷன்” என்ற அமைப்பு நாட்­டுக்குள் வந்­தி­றங்­கி­யது. இவர்கள் ஏன் அவ­ச­ர­மாக வர­வேண்டும்? ஏன் இஸ்ரேல் அவ­ச­ர­மாக வந்­தது? இது­தொ­டர்பில் மக்கள் சிந்­திக்க வேண்டும்.

ஆனால், அபு­தா­பி­யி­லி­ருந்து புல­னாய்வுப்  பிரிவைச் சேர்ந்த 6 அதி­கா­ரிகள் இலங்­கைக்கு வந்­தார்கள். இவர்­களை சந்­தித்த எமது அர­சாங்கம் உங்­களின் உதவி எமக்கு தேவை­யில்லை என திருப்பி அனுப்­பி­விட்­டது.

அல் கொய்தா, ஐ.எஸ் அமைப்பு தொடர்பில் அரபு நாடு­க­ளுக்கு நன்­றாக தெரியும். இவற்­றை­யெல்லாம் பார்க்கும் போது பின்­ன­ணியில்  வேறு ஒரு வலைப்­பின்னல்  இருக்­கின்­றது என எண்ணத் தோன்­று­கின்­றது.


மோடியின் விஜயம் பற்றி….

கேள்வி: இரண்­டா­வது முறை­யா­கவும் பத­வி­யேற்ற இந்­தியப் பிர­தமர் நரேந்­தி­ர­மோடி, முதன் முத­லாக இலங்­கைக்கு மேற்­கொண்ட விஜயம், சர்­வ­தேச நாடு­களின் கவ­னத்தை ஈர்த்­தி­ருந்­தது. ஐ.எஸ் அமைப்­பா­னது இலங்­கைக்கு மாத்­தி­ர­மல்ல இந்­தி­யா­வுக்கும் பாரிய அச்­சு­றுத்தல்.

இந்த அமைப்பை இல்­லா­தொ­ழிக்க இலங்­கைக்கு இந்­தியா உத­வி­யாக இருக்கும் என மோடி விஜ­யத்தின் போது தெரி­வித்­தி­ருந்தார். மோடியின் கருத்­தையும் அவ­ரது விஜ­யத்­தையும் எவ்­வாறு நோக்­கு­கின்­றீர்கள்?

இந்­திய அர­சாங்­கத்­துக்கு அனைத்து விட­யங்­களும் தெரியும். இந்த சம்­பவம் தொடர்­பி­லான சகல உண்­மை­க­ளையும் விரைவில் அவர்கள் வெளிப்­ப­டுத்­து­வார்கள் என்ற நம்­பிக்கை எனக்­குள்­ளது.

ஐ.எஸ். கொடி­யுடன் கிழக்கில் பேரணி

கேள்வி: கடந்த அர­சாங்க காலத்தில் நீங்கள் கைது செய்­யப்­பட்­ட­துடன் கடு­மை­யான விமர்­ச­னத்­துக்கும் ஆளா­னீர்கள். அதற்கு தௌஹீத் ஜமாஅத் அமைப்பு கார­ண­மென கரு­து­கின்­றீர்­களா?

இல்லை. எனது கைதுக்கும் தௌஹீத் ஜமாஅத் அமைப்­புக்கும் ஒரு தொடர்பும் இல்லை. இந்த அமைப்பு பெரிய ஒரு இயக்­க­மில்லை. ஐ.எஸ். அமைப்பை போன்று சீர­ழிந்த இயக்கம் ஒன்றே இந்த தௌஹீத் ஜமாஅத் அமைப்பு.

பாரம்­ப­ரி­யத்தை கொண்ட முஸ்­லிம்கள் 95 வீதம் இந்த நாட்டில் இருக்­கின்­றார்கள். தௌஹீத் ஜமாஅத் அமைப்பில் உள்­ள­வர்கள் அடிப்­ப­டை­வா­தத்தை கொண்­ட­வர்கள். 120 வீடு­க­ளுக்கு தீவைத்­தனர்.

ஐ.எஸ் கொடி­யுடன் கிழக்கில் பேரணி சென்­றார்கள். பொலிஸ் புல­னாய்வு பிரிவு என்ன செய்­து­கொண்­டி­ருந்­தது. அர­சாங்கம் ஒன்று இருந்­ததா இல்­லையா என கூட தெரி­ய­வில்லை. இதைதான் தெரி­வுக்­கு­ழு­வி­டமும் கேட்டேன்.

இந்த தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தொழு­கை­களும் எம்­முடன் ஒப்­பிடும் போது முற்­றிலும் வேறு­பட்­டது. அர­சாங்­கத்தில் சிலர் இந்த அமைப்­புக்கு ஆத­ர­வாக இன்­னமும் குரல் கொடுக்­கின்­றார்கள்.

கேள்வி: தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்­புக்கும் முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­பாய ராஜபக் ஷவிற்கும் தொடர்­புள்­ள­தாக தெரி­வித்­துள்­ளீர்­களே?

நல்ல தொடர்பு இருக்­கின்­றது. கோத்­த­பாய ராஜபக் ஷ  கட்­ட­ளைக்கு இணங்­கவே ஊர்­வலம் சென்­றார்கள். இலங்கை முஸ்­லிம்கள் வர­லாற்றில் முதன் முத­லாக ஆண், பெண், பிள்­ளைகள் என அனை­வ­ரையும் வீதிக்கு இறக்கி சீர­ழித்­த­வர்கள் தான் இந்த தௌஹீத் ஜமாஅத் அமைப்பு .

தெரிவுக் குழு முன்­னி­லையில் அஸாத் சாலி காட்டி கொடுத்து விட்டார் என நினைப்­பார்கள். ஆனால் நான் யாரையும் காட்டி கொடுக்­க­வில்லை. கள்­வனை கள்வன் என்றும் தீவி­ர­வா­தியை தீவி­ர­வாதி என்றும் வெளிப்­ப­டை­யாக கூறி­யுள்ளேன்.

கோத்­த­பாய ராஜபக் ஷ தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்­புடன் தொடர்பை பேணி­ய­தற்­கான நோக்கம் எது­வாக இருந்­தி­ருக்­கலாம்?முஸ்­லிம்­களை பிரிக்க வேண்டும் என்­பதே இவர்­களின் நோக்கம். இப்­போது முஸ்லிம் பிர­தி­நி­திகள் ஒன்­றி­ணைந்து பதவி வில­கி­யதே இந்த நாட்டில் பிரச்­சி­னை­யாக இருக்­கின்­றது. இவர்கள் எதிர்­பார்க்­க­வில்லை.

மஞ்சள் தீவி­ர­வாதம்

மஞ்சள் உடை­ய­ணிந்த தீவி­ர­வா­தமே இப்­போது நாட்டில் இருக்­கின்­றது. உண்­ணா­வி­ரதம் என்ற போர்­வையில் ஜீவ­னியை குடித்­து­கொண்­டி­ருந்த ரத்ன தேர­ருக்கும் கோத்­த­பா­ய­வுக்கும் தொடர்பு உள்­ளது. அவ­சர காலச் சட்டம் அமுலில் இருக்கும் போது எவ்­வாறு உண்­ணா­வி­ரதம் இருக்க முடியும். ஏன் நீதியை நிலை­நாட்­ட­வில்லை.

கேள்வி: விடு­தலைப் புலிகள் அமைப்பை ஒடுக்­கு­வ­தற்­கா­கவே தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பு பயன்­ப­டுத்­தப்­பட்­ட­தாக தக­வல்கள் இருக்­கின்­றன. உங்கள் பார்­வையில்…?

தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்­புக்கு அந்­த­ள­வுக்கு திறமை இருக்­க­வில்லை. பணத்­துக்­காக உரு­வாக்­கப்­பட்ட அமைப்பே இது.  எஸ்.எல்.டி. அமைப்பு உள்ள கட்­டிடம் எவ்­வாறு வந்­தது. இதை யார் வாங்கி தந்­தார்கள்? கோத்­த­பாய ராஜபக் ஷ வாங்கி தந்­தாரா? அல்­லது சர்­வ­தே­சத்­தி­ட­மி­ருந்து பணம் வந்­ததா என யாரும் கேள்வி கேட்­பதில்லை. ஆனால் பள்­ளி­வா­சல்­க­ளுக்கு  சென்று கேள்வி கேட்­கின்­றார்கள்.

பணத்துக்கு ஏமாறவில்லை

தனது வீட்டில் ஐந்து வாள்கள் உள்­ள­தாக இரா­ணுவத் தள­பதி கூறு­கிறார். எனது வீட்டில் 13 பிள்­ளைகள் என்­பதால் கட்­ட­லுக்கு அடியில் தனது அப்பா வாள் ஒன்றை வைத்­தி­ருந்தார் என ஜனா­தி­பதி கூறி­யுள்ளார். ஒவ்­வொரு சிங்­க­ள­வரின் வீட்­டிலும் வாள் உள்­ளது என கரு ஜய­சூ­ரிய தெரி­வித்­துள்ளார். இதனை பொன்­சேகா பொய் என்­கிறார்.

தௌஹீத் ஜமாஅத் அமைப்பை  சிங்­க­ள­வர்கள் காட்­டி­கொ­டுக்­க­வில்லை. முஸ்­லிம்­களே காட்­டி­கொ­டுத்­தார்கள். தம்மை காட்­டி­கொ­டுக்க வேண்டாம் என 14 மில்­லியன் ரூபா பணத்தை  வீதியில் வீசி­னார்கள்.

ஆனால் எமது மக்கள் பணத்­துக்கு ஏமா­ற­வில்லை. நாட்டின் அமை­தியை கருதி ஒன்­றி­ணைந்து செயற்­பட்­டார்கள். தற்­போது அந்த மக்­க­ளையே சந்­தேகக் கண் கொண்டு பார்க்கும் நிலை ஏற்­பட்­டுள்­ளது.

முஸ்­லிம்கள் அச்­சத்­து­டனே வாழ்ந்து கொண்­டி­ருக்­கின்­றார்கள். அர­சாங்க உத்­தி­யோகம் செய்த முஸ்­லிம்­களை கூட இந்த அர­சாங்கம் வீட்­டி­லேயே தங்­கி­யி­ருக்க வேண்­டிய நிலையை உரு­வாக்கி கொடுத்­துள்­ளது.

சிங்களத்தில் மாத்திரம் நல்லிணக்கம்

முஸ்லிம் பிர­தி­நி­திகள் ஒன்­றாக வில­கி­யது மொட்டு கட்­சி­யி­ன­ருக்கே தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. ‘முஸ்லிம் தலை­வர்கள் சிங்­க­ளத்தில் நல்­லி­ணக்கம் சமா­தானம் என கதைக்­கின்­றார்கள்.

ஆனால் தமிழில் தீவி­ர­வா­தமே பேசு­கின்­றார்கள்” என மஹிந்த ராஜபக் ஷ கூறி­யுள்ளார். இவர்­களே அடிப்­ப­டை­வா­திகள். முஸ்­லிம்கள் சிலர் இந்த நபர்­களை நம்­பு­கின்­றார்கள். இது தொடர்பில் முஸ்­லிம்கள் அவ­தா­ன­மாக இருக்க வேண்டும்.

மொட்டு சின்­னத்தை சேர்ந்­த­வர்­களே முஸ்­லிம்­களின் சொத்­துக்­களை இலக்கு வைத்து தாக்­கி­னார்கள். முதலில் தமி­ழர்­களை தாக்­கினோம் இப்­போது முஸ்­லிம்­களை தாக்­கி­யுள்ளோம். எனவே சிங்­க­ள­வர்கள் எமக்கு ஆத­ர­வாக ஒன்று திரள வேண்டும் என்­பது இவர்­களின் நோக்­க­மாக உள்­ளது.

ஜனா­தி­பதி வேட்­பாளர் ஒருவர், சிறு­பான்­மை­யி­னரின் வாக்­குகள் இன்றி வெற்றி பெற­மு­டி­யாது. மஹிந்த ராஜபக் ஷ குழு­வி­ன­ருக்கு சிறு­பான்­மை­யி­னரின் வாக்­கு­களை பெறு­வது என்­பது எட்­டாக்­க­னி­யாகும்.

இதற்­காக சிங்­கள மக்கள் அனை­வ­ரையும் இலக்­காக வைத்து சிறு­பான்­மை­யின மக்கள் மீது அட்­ட­கா­சங்­களை கட்­ட­விழ்த்­துள்­ளனர்.

அரசு வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­றி­யி­ருந்தால்…

2015 ஆம் ஆண்டு ஆட்­சிக்கு வந்த இந்த அர­சாங்கம் ஊழல் செய்­த­வர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுப்போம் என வாக்­கு­றுதி வழங்­கி­னார்கள். ஆனால் இது­வரை ஒரு­வரை கூட சிறை­யி­ல­டைக்­க­வில்லை.

அர­சாங்கம் மக்­க­ளுக்கு வழங்­கிய வாக்­கு­று­தி­களை நிறை­வேற்றி இருந்தால் இன்று மஹிந்த குடும்­பமே சிறை­யினுள் இருந்­தி­ருக்கும். யாரும் வாய் திறந்­தி­ருக்­க­மாட்­டார்கள்.

கேள்வி: ஊழல் செய்­த­வர்­களை இது­வரை கைது செய்­யாமல் இருப்­ப­தற்கு காரணம் எது­வென நீங்கள் கரு­து­கின்­றீர்கள்?

இவர்­க­ளி­டை­யி­லான ஒப்­பந்­ததே இது. யாரும் யாருக்கு எதி­ராகவும் நட­வ­டிக்கை எடுக்­கப்­போ­வ­தில்லை. பாரா­ளு­மன்­றத்தில் உள்ள 225 பேரின் சொத்து விப­ரங்­க­ளையும் ஆராய்ந்து பார்க்கப் போனால் அனை­வரும் சிக்­கிக்­கொள்­வார்கள்.

கேள்வி: பாரா­ளு­மன்ற விசேட தெரி­வுக்­குழு முன்­பாக சர்ச்­சை­யான பல விட­யங்­களை சாட்­சி­ய­மாக வழங்­கி­யி­ருந்­தீர்கள். இதன் பின்னர் ஜனா­தி­ப­தி­யையும் அவ­ச­ர­மாக சந்­தித்­தி­ருந்­தீர்கள். சாட்­சியம் வழங்­கிய பின்னர் உங்­க­ளுக்கு உயர்­மட்­டங்­க­ளி­லி­ருந்து அழுத்தம் ஏதும் பிர­யோ­கிக்­கப்­பட்­டதா?

இல்லை. மீண்டும் தெரி­வுக்­குழு முன்­னி­லையில் சாட்­சியம் வழங்க உள்ளேன். சாட்­சி­யத்­துக்கு ஆதா­ர­மான பல ஆவ­ணங்­க­ளையும் கைய­ளிக்க உள்ளேன்.

500மில்­லியன் இலஞ்சம்

கேள்வி : தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பு தொடர்பில் எதுவும் பேசக்­கூ­டாது எனவும் அதற்­காக 500 மில்­லியன் ரூபா பேரம் பேசப்­பட்­ட­தா­கவும் தெரி­வுக்­குழு முன் சாட்­சியம் வழங்­கி­யி­ருந்­தீர்­களே?

இல்லை. அங்கு தௌஹீத் ஜமாஅத் அமைப்பு தொடர்­பாக கூற­வில்லை.  நான் அன்று கைது செய்­யப்­பட்ட  இரவு வேளையில் இரா­ணுவ புல­னாய்வு பிரிவை சேர்ந்த சிலர் என்­னிடம் வந்து, ‘உங்­க­ளுக்கு 500 மில்­லியன் ரூபா பணம் தரு­கின்றோம்.

பணத்தை எடுத்­துக்­கொண்டு நாட்டை விட்டு தப்பிச் செல்­லுங்கள். இல்­லா­விட்டால் எங்­க­ளோடு இணைந்து அர­சியல் செய்ய வேண்டும்.

அதற்­காக 300 மில்­லியன் ரூபாவை நீங்­களே வைத்­துக்­கொண்டு 200 மில்­லியன் ரூபாவை தேர்தல் செல­வீ­னங்­க­ளுக்­காக பயன்­ப­டுத்­துங்கள்” என்று நிபந்­தனை விதித்­தார்கள்.

அவர்கள் கொண்டு வந்­தி­ருந்த உடன்­ப­டிக்­கைகள் தொடர்­பான ஆவ­ணங்­களை கிழித்­தெ­றிந்து விட்டே சிறை­யி­லி­ருந்து யாரு­டைய உத­வியும் இன்றி வெளியில் வந்தேன்.

கேள்வி: சஹ்ரான் காத்­தான்­கு­டியை தனது கட்­டுப்­பாட்­டுக்குள் வைத்­தி­ருந்­த­தா­கவும் முன்னாள் கிழக்கு ஆளுநர் ஹிஸ்­புல்­லாஹ்­வுடன் தொடர்­பு­களை பேணி வந்­த­தா­கவும் குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்­துள்­ளீர்கள். இது­தொ­டர்பில் ஆதா­ரங்கள் உள்­ளதா?

இல்லை. நான் அவ்­வாறு கூற­வில்லை.

தேர­ருக்கு நன்றி

கேள்வி: உங்­களை இரா­ஜி­னாமா செய்ய தூண்­டி­யது யார்? ஏதேனும் அர­சியல் பின்­புலம் இருக்­கு­மென கரு­து­கி­றீர்­களா?

யாரு­டைய அழுத்­தத்­திலும் நான் இரா­ஜி­னாமா செய்­ய­வில்லை. நானா­கவே முடி­வெ­டுத்து பத­வியை இரா­ஜி­னாமா செய்தேன். இதன் பின்னர் முஸ்லிம் பிர­தி­நி­திகள் அனை­வரும் கூட்­டாக பதவி வில­கி­னார்கள். இது மொட்டு சின்ன குழு­வி­ன­ருக்கு பாரிய அடி­யாக இருந்­தது. எதிர்­வரும் தேர்­தலில் ரத்ன தேரரின் புகைப்­ப­டத்தை வைத்தே நாங்கள் தேர்தல் பிர­சா­ரங்­களில் ஈடு­ப­டுவோம்.

எதிர்­வரும் தேர்­தலில் முஸ்லிம் பிர­தி­நி­திகள் அனை­வரும் ஒன்­றி­ணைந்து ஒரு கூட்­ட­ணி­யாக கள­மி­றங்­கவும் ஆலோ­சித்து வரு­கின்றோம். இதற்கு வழி­ய­மைத்து கொடுத்த ஞான­சார தேர­ருக்கு நன்றி தெரி­விக்க வேண்டும்.

கொள்­ளை­ய­டித்த  பணம் டுபாயில்

கேள்வி: அடிப்­படை மத­வா­தமும் அர­சியல் சக்­தி­களின் செயற்­பாடும் நாட்டை சீர­ழிவை நோக்கி கொண்டு செல்­வ­தாக கூறப்­ப­டு­கின்­றதே..?

நிச்­ச­ய­மாக.., இந்த 21 ஆம் திகதி தாக்­கு­தலின் பின்னர் நடப்­பதை பாருங்கள். மொட்டு சின்­னத்தை சேர்ந்த மஹிந்த அணி­யினர் இன­வா­தமே பேசி வரு­கின்­றார்கள். பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நேரில் சென்று ஒரு சிறு உதவியை கூட செய்யவில்லை. ஆனால் உடனடியாக ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டும் என்பதே இவர்களின் கோரிக்கையாக இருக்கின்றது.

மஹிந்த ராஜபக் ஷ கொள்ளையடித்த பணமெல்லாம் டுபாயில் உள்ளது. இதனை மூடிமறைக்க ரணில் விக்கிரமசிங்கவே உதவி செய்தார். இதற்கு ஆதரவாக மைத்திரிபாலவும் உடன் இருந்தார்.

கேள்வி: இலங்கையில் முஸ்லிம் மக்கள் மிகுந்த அச்சமான சூழ்நிலையில் தமது அன்றாட கடமைகளை மேற்கொள்ள தள்ளப்பட்டுள்ளனர். இதனை எவ்வாறு சீர் செய்யலாம் என நினைக்கின்றீர்கள்?

இந்த அரசாங்கத்தில் முஸ்லிம் மக்கள் தொடர்ந்து சீரழிக்கப்பட்டு வருகின்றார்கள். இதனால் சாதாரண பொதுமகனையும் தீவிரவாதியாக மாற்றி விட வேண்டாம் என கோரிக்கை விடுக்கின்றேன்.

கோத்தா களமிறங்க மாட்டார்

கேள்வி: எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய களமிறங்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றதே..?

இல்லை. அவர் களமிறங்க மாட்டார். அவருக்கு உடல்நிலை சரியில்லை. பசில் ராஜபக் ஷவே களமிறங்குவார் என நம்பத்தகுந்த தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. மறுபக்கம் ஷிரந்தி ராஜபக் ஷவும் களமிறங்க முயற்சிப்பதாக தெரிய வருகின்றது.

கேள்வி : ஐக்கிய தேசியக் கட்சியில் யார் களமிறங்கலாம்?

சஜித் பிரேமதாஸவே களமிறங்க வேண்டும் என அனைவரினதும் விருப்பமாக உள்ளது. ஆனால் ரணில் தலைவராக இருக்கும் மட்டும் அது நடக்காது.

கேள்வி : ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மஹிந்த ராஜபக் ஷ, ரணில் விக்கிரமசிங்க, கோத்தபாய ராஜபக் ஷ அல்லது பசில் ராஜபக் ஷ ஆகியோரில் ஒருவர் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை எவ்வாறு கையாழுவார்கள் என நினைக்கின்றீர்கள்?

இவர்களின் நிலைப்பாடு தொடர்பில் யாராலும் அறிந்து கொள்ள முடியாது. ஆனால் முஸ்லிம் மக்கள் சிந்தித்து செயற்படவேண்டும்.

நேர்காணல் : எம்.டி.லூஸியாஸ்

செய்தி மூலம்: வீர­கே­சரி வார­வெ­ளி­யீடு

Share.
Leave A Reply