வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தை தொடர்ந்து சிம்பு அடுத்தாக நடிக்க இருக்கும் சிம்பு 45 படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.

‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்துக்குப் பிறகு, சிம்பு தற்போது, ஹன்சிகா நடித்துவரும் ‘மஹா’ படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் நடிக்க இருக்கிறார். இதன் படப்பிடிப்பு ஜூலை 23ம் தேதி தொடங்க இருக்கிறது.

201906171155551389_1_Simbu-2._L_styvpfஇந்நிலையில், ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் கௌதம் கார்த்திக்குடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார் சிம்பு.

கன்னடத்தில் உருவான ‘மப்டி’ படத்தின் இயக்குனர் நர்த்தன் என்பவர் இப்படத்தை இயக்குகிறார்.

இந்தப் படத்தில் சிம்பு கேங்ஸ்டராக வில்லன் வேடத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு தற்போது கர்நாடகாவில் நடந்து வருகிறது.

இப்படத்தில் மேலும் நடிக்க இருக்கும் நடிகர்கள், நடிகைகள் பட்டியல் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாக இருக்கிறது.

சிந்துபாத் டிரைலர்

விஜய்சேதுபதி, அஞ்சலி நடிப்பில் அருண்குமார் இயக்கிய ‘சிந்துபாத்’ திரைப்படம் வரும் 21ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

மனைவியை கடத்தி கடல் கடந்து கொண்டு சென்ற வில்லனிடம் இருந்து மனைவியை காப்பாற்றும் நவீன ராமாயண கதையான இந்த படம் முதல் பாதி ரொமான்ஸ் மற்றும் இரண்டாம் பாதி ஆக்சன் கலந்த படமாகும்.

<

தாய்லாந்து வில்லன் அறிமுகமாகும் இந்த படத்தில் ‘இவனோடு பேரை கேட்டாலே தாய்லாந்துல ஒருத்தன் வாயை திறக்க மாட்டான், அவனுக்கு தண்ணி, தம்முன்னு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது,

ஆனா இவனை மாதிரி ஒரு சைக்கோவவ லைஃப்ல பார்திருக்கவே மாட்ட என்ற பில்டப்புடன் அறிமுகமாகிறார் வில்லன்.

விஜய்சேதுபதியின் ரொமான்ஸ் மற்றும் ஆக்சன் நடிப்பு, அஞ்சலியின் வழக்கமான கத்தி பேசும் வசனங்கள், வெளிநாட்டு சேஸிங் காட்சிகளில் ஒளிப்பதிவு, யுவனின் பின்னணி இசை ஆகியவை படத்தின் பிளஸ்களாக இருப்பதால் ஒரு நல்ல ரொமாண்டிக் ஆக்சன் படத்தை எதிர்பார்க்கலாம்.

Share.
Leave A Reply