மட்டக்களப்பு – பொலன்னறுவை பிரதான வீதியின் வெலிகந்த பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
டிரக்டர் ஒன்றும் வேன் ஒன்றும் மோதிக்கொண்டதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று அதிகாலை 1.45 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் 4 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெலிகந்த நோக்கி பயணித்த டிரக்டர் ஒன்றை அதே திசையில் பயணித்த ஒன்று மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் டிரக்டரில் பயணித்த 5 பேரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் மேலும் 12 பேர் காயங்களுக்கு உள்ளாகி பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெலிகந்த, போவத்த பகுதியை சேர்ந்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.