சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் அஜித்தின் மனைவி தேவிகா என்பவர் புகார் ஒன்றைக் கொடுத்தார்.

அதில் தன்னுடைய கணவர் அஜித்தின் நடவடிக்கைகள் சரியில்லை என்று குறிப்பிட்டிருந்தார். இந்தப் புகாரின்பேரில் அஜித் கைது செய்யப்பட்டார்.

மனைவி புகாரில் சிக்கிய அஜித்குமார்

சென்னை சாலிகிராமத்தில் குடியிருப்பவர் அஜித் (47), இவரின் மனைவி தேவிகா. இவர் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மனுவில், `அஜித்தின் நடவடிக்கைகள் சில நாள்களாக சரியில்லை.

தினமும் என்னை அடித்து துன்புறுத்துகிறார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுங்கள்’ என்று குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, அஜித்திடம் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

ajith_17267இது குறித்து போலீஸார் கூறுகையில், “அஜித்தின் சொந்த ஊர் கேரளா. இவர், நிகழ்ச்சிகளுக்கும் விழாக்களுக்கும் பெண்களை அனுப்பி வைக்கும் நிறுவனம் நடத்திவருகிறார்.

இதனால் அஜித், பெண்களுடன் சகஜமாக பழகுவார். இதுதான் அவரின் குடும்பத்தில் பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் கணவன் மனைவிக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு இருவரும் தனித்தனியாக வசித்துவருகின்றனர். இந்தத் தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார்.

கேரளாவில் அஜித்துக்கு இரண்டு மனைவிகள் இருப்பதாகவும் அதை மறைத்து தன்னை திருமணம் செய்துகொண்டதாகவும், தற்போது நான்காவதாக இன்னொரு பெண்ணை திருமணம் செய்துகொள்ளப்போவதாக அஜித் கூறுவதாகவும் தேவிகா எங்களிடம் தெரிவித்தார்.

அதுதொடர்பாக அஜித்திடம் விசாரித்தோம். தேவிகா கொடுத்த புகாரின் அடிப்படையில் பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினோம். அப்போது ஜாமீனில் அஜித் விடுவிக்கப்பட்டார்” என்றனர்.

போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், “அஜித்தின் மனைவி தேவிகாவுக்கு சில நாள்களுக்கு முன் போன் அழைப்பு வந்துள்ளது.

அதில் பேசிய பெண், அஜித்தின் மனைவி என்று கூறியுள்ளார். அதைக்கேட்டு தேவிகா அதிர்ச்சியடைந்துள்ளார்.

போனில் பேசிய பெண், அஜித் என்னையும் திருமணம் செய்து ஏமாற்றிவிட்டார் என்று கூறியுள்ளார். அதன்பிறகே தேவிகா எங்களிடம் புகார் கொடுத்தார்.

அஜித்திடம் விசாரித்தபோது தனக்கு மூன்று திருமணங்கள் நடந்துள்ளதை ஒப்புக்கொண்டார். தேவிகா மற்றும் அஜித்தின் இன்னொரு மனைவியும் எங்களிடம் சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளனர்.

நீதிமன்றத்தில் அஜித் தரப்பில் ஆஜராகிய வழக்கறிஞர் அளித்த வாக்குறுதி அடிப்படையில் அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது” என்றார்.

கேரளாவில் இருந்து ஜோதி என்ற பெண் போனில் சில தகவல்களை போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.

அதில், தன் கணவர் கடந்த 1998-ம் ஆண்டு தன்னைத் திருமணம் செய்ததாகவும், 18 வயதில் ஒரு மகனும், 16 வயதில் ஒரு மகளும் இருப்பதாகவும் கூறியுள்ளார். அதன் பின்னர் 2002-ம் ஆண்டு டெலிலா என்ற பெண்ணைத் திருமணம் செய்துள்ளார்.

அந்தப் பெண்ணுக்கு அஜித் மூலம் 12 வயதில் ஒரு மகன் உள்ளார். தன்னையும், டெலிலாவையும் ஏமாற்றி திருமணம் செய்துள்ளார்.

தற்போது தேவிகாவையும் அவர் ஏமாற்றி திருமணம் செய்துகொண்டார் என்று போலீஸார் தெரிவித்தனர்.

அஜித் தரப்பில் நம்மிடம் பேசியவர்கள், “தேவிகா கொடுத்த புகாரின்பேரில் அஜித் மீது போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த வழக்கை சட்ட ரீதியாக எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம்” என்றனர்.

தேவிகா தரப்பினர் போலீஸாரிடம் கூறியுள்ள தகவலில் “அஜித் மீது பல குற்றச்சாட்டுக்களை குறிப்பிட்டுள்ளனர்.

குறிப்பாக பெண்களை மையப்படுத்தியே அவர்களின் குற்றச்சாட்டுகள் உள்ளன. அஜித் நடத்தும் நிறுவனத்தின் மூலம் வரவேற்பு நிகழ்ச்சிகளுக்கு வரவேற்பாளராகச் செல்லும் பெண்களுடன் அஜித் நெருங்கிப் பழகியுள்ளார்.

அஜித்தின் சுயரூபம் தற்போதுதான் எங்களுக்கு தெரியவந்துள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply