நான்கு வய­தான ஒரு சிறுவன், இனிப்பு வாங்­கு­வ­தற்­காக தனது வீட்­டி­லி­ருந்த கார் ஒன்றை 2 கிலோ­மீற்­ற­ருக்கு அதி­க­மான தூரம் தனி­யாகச் செலுத்திச் சென்ற சம்­பவம் அமெ­ரிக்­காவில் இடம்­பெற்­றுள்­ளது.

மின­சோட்டா மாநி­லத்தின், பிளெய்ன் நகரைச் சேர்ந்த செபஸ்­டியன் எனும் 4 வய­தான சிறு­வனே சொகுசு கார் ஒன்றை சுமார் ஒன்­றரை மைல்     ( சுமார். 2.4 கிலோ­மீற்றர்) தூரம் தனி­யாகச்  செலுத்திச் சென்­றுள்ளான்.

பிளெய்ன் நகரில் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை காலை இச்­சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது.

sebastian-car-2

இச்­சி­றுவன், இனிப்பு வாங்­குவ­தற்­காக எரி­பொருள் நிரப்பு நிலை­ய­மொன்­றி­லுள்ள கடைக்குச் செல்ல தீர்­மா­னித்தான்.

தனது பூட்­ட­னாரின் கார் சாவி (திறப்பு) சுவரில் தொங்­கிக்­கொண்­டி­ருந்த நிலையில், அதை எடுத்த சிறுவன், ஒரு­வ­ருக்கும் தெரி­யாமல் மேற்­படி Hyundai santa fe செலுத்திச் செல்ல ஆரம்­பித்தான்.

சுமார் ஒன்ரை மைல் தூரம் அவன் பயணம் செய்­தி­ருந்த  நிலையில், குட்டிப் பையன் ஒருவன் காரொன்றை செலுத்திச் செல்­வ­தாக பஸ் சாரதி ஒருவர், பிளெய்ன் நகர பொலி­ஸா­ருக்கு தொலை­பேசி மூலம் தகவல் கொடுத்­தார்.

அதற்குள் 4 வய­தான செபஸ்­டியன் எனும் சிறு­வனைக் காண­வில்லை என ஜென்னா ஸ்வென்சன் என்­பவர் பொலி­ஸா­ரிடம் தெரி­வித்­தி­ருந்தார்.

sebastian-5

இரு தொலை­பேசி அழைப்­பு­க­ளிலும் கூறப்­பட்ட விட­யங்­களை இணைத்துப் பார்த்த பொலி­ஸா­ருக்கு நிலைமை புரிந்­தது.

அவர்கள் உட­ன­டி­யாக பஸ் சாரதி கூறிய இடத்­துக்குச் சென்­றனர். அவ்­வே­ளையில் பஸ் சாரதி மேற்­படி காரை நிறுத்தி, காரின் சாவி­யையும் தன் வசம் வைத்­துக்­கொண்­டி­ருந்தார்.

பின்னர், சிறு­வனை அவனின் வீட்டு;க்கு அழைத்துச் சென்று குடும்­பத்­தி­ன­ரிடம் ஒப்­ப­டைத்­தனர்.

வளர்ந்­த­வர்­க­ளுக்­காக தயா­ரிக்­கப்­பட்ட காரொன்றை மிகச் சிறிய சிறுவன் இயக்­கு­வது கடினம். ஆனால், செபஸ்­டியன், மேற்­படி காரை வீட்­டி­லி­ருந்து பின்­னோக்கி எடுத்து, அயல்­வீ­டு­களைக் கடந்து, இட­து­பு­ற­மாக பல்­க­லைக்­க­ழக வீதிக்குத் திருப்பி காரை செலுத்திச் சென்­றி­ருந்தான்.

car-Hyundai

மணித்­தி­யா­லத்­துக்கு 10 முதல் 14 மைல் வேகத்தில் அவன் சென்றுகொண்டிருந்தான், பரபரப்பான பிரதான வீதியொன்றை அவன் நெருங்கிக்கொண்டிருந்த நிலையில் அவன் தடுத்து நிறுத்தப்பட்டான் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இச்சிறுவன் பாதூகாப்பாக திரும்பி வந்தமை குறித்து நிம்மதியடைந்துள்ள குடும்பத்தினர், இனிமேல் சிறுவனின் கைக்கு எட்டாத வகையில் கார் சாவியை வைத்திருப்பதற்கும். சிறுவன் மீது மேலும் கவனம் செலுத்தவும் உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

 

 

 

Share.
Leave A Reply