மேல் மாகாணசபை உறுப்பினர் மல்ஷா குமாரதுங்கவின் சவாலை ஏற்று ஐஸ் நீரில் குளித்த மேல் மாகாணசபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர, மேலும் மூவருக்கு ஐஸ் நீரில் குளிக்கும் சவாலை விடுத்தார்.
ஊவா மாகாணசபையின் ஐ.தே.க முதலமைச்சர் வேட்பாளர் ஹரின் பெர்ணான்டோ, ஜே.வி.பி உறுப்பினர் லால்காந்த மற்றும் மேல் மாகாணசபை உறுப்பினர் செனால் வெல்கம ஆகியோருக்கே ஹிருணிகா இந்த சவாலை விடுத்தார்.
மேல் மாகாண சபை உறுப்பினர் மல்சா குமாரதுங்க, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் மேர்வின் சில்வா மற்றும் மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர ஆகிய மூவரையும் ‘ஐஸ் வாளி சவாலுக்கு’ அழைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி மஹிந்த, மேர்வின் சில்வாவுக்கு ஐஸ் பக்கட் குளியலுக்கு சவால் (வீடியோ )
ஏ.எல்.எஸ். எனப்படும் நரம்பு தொடர்பான நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், நிதி திரட்டவும் ஐஸ் பக்கெட் சவால் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சவாலை உலக பிரபலங்களில் பலர் ஏற்று தங்கள் தலையில் ஒரு பக்கெட் குளிர்ந்த நீரை ஊற்றியுள்ளனர்.
மேலும் இந்த சவாலை ஏற்கும் ஒவ்வொருவரும் 3 பேரை கைகாட்டி அவர்களை இந்த சவாலை ஏற்குமாறு கூற வேண்டும். அப்படி ஐஸ் பக்கெட் சவாலை ஏற்க மறுக்கும் நபர்கள் அறக்கட்டளைக்கு 100 டொலர்களை செலுத்த வேண்டும்.
மேலும் சவால் விடுக்கத் தவறினாலும் குறித்த நபர் அறக்கட்டளைக்கு 100 டொலர்களை செலுத்த வேண்டும். இரண்டு சவால்களையும் வெற்றி கொண்டால் அறக்கட்டளைக்கு பத்து டொலர்கள் செலுத்த வேண்டும்.
இந்நிலையில் மேல் மாகாணசபை உறுப்பினர் மல்சா குமாரதுங்க, இந்த ஐஸ் பக்கெட் குளியலை மேற்கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் மேர்வின் சில்வா மற்றுமு; மேல் மாகாணசபை உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர ஆகியோருக்கு சவால் விடுத்துள்ளார்.