மூன்று பவுண் தங்­கத்­தி­னையும் பணத்­தி­னையும் கண்­டெ­டுத்த பெண் ஒருவர் வாழைச்­சேனை பொலிஸில் ஒப்­ப­டைத்த சம்­ப­வ­மொன்று இடம் பெற்­றுள்­ளது.

கல்­மடு வீதி விநா­ய­க­பு­ரத்தைச் சேர்ந்த எஸ்.சகுந்­தலா என்ற பெண் வாழைச்­சேனை இலங்கை வங்­கிக்கு தனது  தேவையின் நிமித்தம் முச்­சக்­க­ர­வண்­டியில் வந்த போது குறித்த முச்­சக்­க­ர­வண்­டியில் மூன்று பவுண் மதிக்­கத்­தக்க தங்­க­ சங்கிலியையும் 38560 ரூபா பணமும் இருந்த தனது கைப்­பையை தவறவிட்டுள்ளார்.

இதே­வேளை  மேற்­படி முச்­சக்­கர வண்­டியை  வாட­கைக்கு அமர்த்திச் சென்ற வாழைச்­சேனை அறபா வீதியைச் சேர்ந்த எம்.ஐ.மசா­கிரா என்ற பெண் முச்சக்க­ர­வண்­டியில் இருந்த கைப்­பையைக் கண்டு  சார­தி­யிடம் கேட்­ட­போது  அவர் தெரி­யாது என்று சொல்­லவும் வாழைச்­சேனை பொலிஸில் ஒப்படைத்துள்ளார்.

இதே வேளை தனது பணமும்   தங்க சங்கிலியும் தொலைந்து விட்­ட­தாக குறித்த பெண் வாழைச்­சேனை பொலிஸில் முறைப்­பாடு செய்­வ­தற்கு சென்ற போது குறித்த பெண்­ணிடம் பணத்­தி­னதும் தங்க சங்கிலினதும் அடை­யா­ளங்­களை விசா­ரித்து விட்டு உரி­ய­வ­ரிடம் பொருட்­களை கையளித்ததுடன் கைப்பையை கண்டெ டுத்து பொலிஸில் ஒப்படைத்த பெண்ணை பொலிஸார் பாராட்டினர்.

Share.
Leave A Reply