பெத்த மகளைக் கல்­யாணம் செய்து கொள்வான் என்ற நம்­பிக்­கையில் கள்ளக் காத­ல­னுடன் அனுப்பி வைத்த தாய்க்கு செத்த மகளின் சடலம் தான் கிடைத்­துள்­ளது. இக்­கொலை வழக்கில் தாயையும் சேர்க்­க­லாமா வேண்­டாமா என்று பொலிஸார் திணறி வரு­கின்­றனர்.

பெத்த மகளைக் கல்­யாணம் செய்து கொள்வான் என்று கள்ளக் காத­ல­னுடன் அனுப்பி வைத்த தாய்க்கு செத்த மகளின் சட­லம்தான் கிடைத்­துள்­ளது. இக்­கொலை வழக்கில் தாயையும் சேர்க்­க­லாமா வேண்­டாமா என்று பொலிஸார் திணறி வரு­கின்­றனர்.

தமி­ழ­கத்தில் சிதம்­பரம் கிள்ளை  பேரூ­ராட்­சிக்கு உட்­பட்ட  எம்.ஜி.ஆர். திட்டில் உள்­ளது  அரசு தொடக்­கப்­பள்ளி. இதற்குப் பின்­புறம் உள்ள   புது ஓடையில் ஜூலை 10 ஆம் திகதி   வல்லுறவுக்குட்படுத்தி கொலை செய்­யப்­பட்ட நிலையில் கிடந்­தது இளம் பெண்ணின் சடலம்.

இதை அவ்­வ­ழியே சென்­ற­வர்கள் பார்த்துப் பொலி­ஸா­ருக்கு தகவல் கொடுக்க கிரா­மமே பத­றி­யது. ஆடை களை­யப்­பட்ட நிலையில் சட­லத்­துக்கு அருகே கிடந்த பேக்கில் சுடி­தார்கள் செருப்பு மற்றும் அந்தப் பையில் 10 ஆவது வகுப்பு என்று எழு­தப்­பட்­டி­ருந்­தது தான் பொலி­ஸுக்கு கிடைத்த ஒரே ஆதாரம்.

இதை­ய­டுத்து கடலூர் எஸ்.பி. ராதி­காவின் உத்­த­ரவின் பேரில் சிதம்­பரம் டி.எஸ்.பி ராஜாராம்   தலை­மையில்   தனிப்­படை களம் இறங்­கி­யது. பொலிஸார் நடத்­திய விசா­ர­ணையில் சீர்­காழி அருகே காரை­மேடு அரசு ஆதி திரா­விடர் உயர் நிலைப் பள்ளி மாணவி கவு­சல்­யாதான் அப்பெண் என்­பது ஊர்­ஜி­த­மா­னது.

அங்­கி­ருக்கும் அரச விடு­தியில் தங்கிப் படித்து வந்த மாணவி கவு­சல்­யாவின் சொத்த ஊர் சீர்­காழி வட்டம் தென்­ன­ல­க்குடி என்­பதும் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

இது குறித்து தென்­ன­ல­க்குடி கிரா­மத்­தி­ன­ரிடம் விசா­ரித்தோம். புவ­னி­கிரி அரு­கி­லுள்ள குறி­யா­மங்­க­லத்தைச் சேர்ந்த அன்பு தாஸ் என்­கிற ஜானி சிறு­வ­யதில் பெற்­றோரை இழந்­தவன். எம்.ஜி.ஆர். திட்டைச் சேர்ந்த ஆறு­முகம் என்ற மீனவர் தத்து எடுத்து வளர்த்தார். வேல்­விழி என்ற பெண்­ணுடன் அன்­பு­தா­ஸுக்கு திரு­மணம் ஆகி விட்­டது.

இவன் கட்­டு­மரத் தொழில் சம்­பந்­த­மாக பனை மரம் வாங்க சீர்­காழி, பழை­யாறு கிரா­மத்­திற்கு வருவான். அங்கு அருள்தாஸ், ஜான், விஜய் என்று பல பெயர்­களில் தன்னை அறி­மு­கப்­ப­டுத்திக் கொள்வான். அப்­போது தான் சித்தாள் வேலைக்குச் சென்ற கவு­சல்­யாவின் தாய் பழ­னி­யம்­மா­ளுடன் கள்ளத் தொடர்பு ஏற்­பட்­டுள்­ளது.

இரண்டு மாதங்­க­ளுக்கு முன்­புதான் அந்தத் தொடர்பே ஏற்­பட்­டது. அதற்குள் அவனைப் பற்றி விசா­ரிக்­காமல் அவ­னுக்கு தனது மகள் கவு­சல்­யாவை கட்டிக் கொடுக்க பழ­னி­யம்மாள் முடி­வெ­டுத்தாள்.

அவ­ளுக்கு நான்கு பெண் குழந்­தைகள். ஒரு ஆண். நான்கில் ஒருத்­தி­யை­யா­வது கரை­சேர்த்தால் போதுமே என்ற நம்­பிக்­கையில் ஒரு மாத­மாக அவ­னுடன் கவு­சல்­யாவை அடிக்­கடி அனுப்பி வைத்தாள். இம்­முறை கவு­சல்­யாவைத் திரு­மணம் செய்து கொள்வான் என்ற நம்­பிக்­கையில் பழ­னி­யம்­மாளே உற­வி­னர்­க­ளிடம் இருந்து உடை­களை வாங்கிக் கொடுத்து அனுப்பி வைத்தாள்.

ஆனால் இப்­படிச் செய்வான் என்று எதிர்­பார்க்­க­வில்லை என்று அக்கம் பக்கம் வசிப்­ப­வர்கள் கூறினர்.

இது பற்றி பொலிஸ் வட்­டா­ரத்தில் விசா­ரித்த போது, சீர்­காழி, காரை­மேடு ஆதி திரா­விடர் உயர்­நிலைப் பள்­ளிக்குச் சென்ற வைத்­தீஸ்­வரன் கோயில் பொலிஸார் கவு­சல்யா வீட்­டிற்கும் போய் கன்பேர்ம் செய்து கொண்­டனர்.

ஜானிக்கு கவு­சல்­யாவின் அப்பா பேசு­வது போலப் போனைப் போட்டு பொலிஸார் பேச வைத்த போது சென்­னையில் இருக்­கிறேன். கவு­சல்­யாவை மதியம் பேச வைக்­கிறேன். சிங்­கப்­பூ­ருக்கு போகப் போகிறோம் என்று கட­லூரில் இருந்த படியே பேசினான்.

மீண்டும் தொடர்பு கொண்ட போது மூன்று மணிக்கு செல்போன் சுவிட்ச் ஆப் செய்­யப்­பட்­டது. அதன் பிறகு அவ­னு­டைய செல்போன் டவரை வைத்து ஜூலை 15 ஆம் திகதி இரவு கட­லூரில் ஒரு லொட்ஜில் தங்­கி­ருந்த போது பிடித்தோம். அப்­போதும் கூட ஒரு பெண்­ணோடு உல்­லா­ச­மாக இருந்தான்.

அப்­போது பூம்­புகார், கும்­ப­கோணம், சிதம்­பரம் போன்ற இடங்­க­ளுக்கு மாணவி கவு­சல்­யாவை அழைத்துச் சென்று சுற்­றி­யி­ருப்­பதைக் கூறி­யி­ருக்­கிறான். ஜூலை 6, 7ஆம் திகதிகளில் பிச்­சா­வ­ரத்தில் உல்­லா­ச­மாக இருந்­தி­ருக்­கி­றார்கள். என்னைக் கல்­யாணம் பண்­ணிக்­கி­றதாச் சொன்­னியே, எப்ப பண்­ணிக்­குவ-? என்று கவு­சல்யா கேட்ட போதுதான், தனக்கு ஏற்­க­னவே திரு­ம­ண­மாகி மூன்று குழந்­தைகள் இருக்­கி­றது உன்னை வைப்­பாட்­டியா வச்­சிக்­கிறேன் என்றும் சொல்­லி­யி­ருக்­கிறான்.

இதில் கோப­மான கவு­சல்யா உனக்குத் தான் கல்­யாணம் ஆகிப்­போச்­சில்ல அப்ப ஏண்டா என் வாழ்க்­கையை கெடுத்தே? படிச்­சிக்­கிட்டு இருந்த என்னை நாச­மாக்­கிட்­டியே உன்னைச் சும்மா விட­மாட்­டேன்டா என்று கத்திக் கூச்சல் போட்டி­ருக்­கிறாள்.

இதனை எதிர்­பார்க்­காத அருள் தாஸ், அவ­ளு­டைய கழுத்தை நெரிக்­கவே மயங்கி சரிந்து இறந்து போயி­ருக்­கிறாள். அவளை அப்­ப­டியே தூக்கிக் கொண்டு போய் எம்.ஜி.ஆர். திட்­டுக்குப் பின்­பு­ற­முள்ள புது ஓடையில் போட்டு விட்டு எஸ்கேப் ஆகி விட்டான் என்­றனர்.

கவு­சல்யா படித்த பள்­ளியின் தலைமை ஆசி­ரியர் உல­க­நா­த­னிடம் பேசி­ய­போது, இந்த கவு­சல்யா ஏற்­க­னவே ஒரு வரு­ட­மாகப் பள்­ளிக்கு வரா­ததால் ஒன்­பதாம் வகுப்பில் இரண்­டாண்­டுகள் படித்தார். ஜூலை 3ஆம் திக­தி­யி­லி­ருந்து பள்ளிக்கு வர­வில்லை.

அவ­ரு­டைய தங்கை கௌத­மியும்  பத்தாம் வகுப்பு இங்கு தான் படிக்­கிறார். அவ­ரிடம் ஏன் உங்க அக்கா ஸ்கூலுக்கு வரலைன்னு கேட்ட போது, உடம்பு சரியில்லை. அதனால் வரவில்லை என்றார்.

அவங்க அம்மாகிட்டே கேட்ட போதும், அவளுக்கு உடம்பு சரியில்லை என்றே சொன்னார்கள். ஜூலை 15 ஆம் திகதி பொலிஸார் வந்து எங்களிடம் விசாரித்த போது அவருடைய தங்கை கௌதமியைக் காண்பித்தோம். அவளிடம் தனியாகப் பேசி அவரை அழைத்துக் கொண்டு போய்விட்டார்கள். அதன் பிறகு தான் எங்களுக்குத் தெரியும் என்றார்.

Share.
Leave A Reply