சிரிய அரசாங்கத்தின் முக்கிய விமானப் படைத்தளத்தை ஐ.எஸ்.ஐ.எஸ் கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர்.
ஜனாதிபதி பஷார் அல் அசாத்தின் செல்வாக்குமிக்க ரக்கா மாகாணத்திலுள்ள விமானப் படைத்தளமே கிளர்ச்சியாளர்கள் வசமாகியுள்ளது.
தொடர்ச்சியாக இடம்பெற்ற மோதல்களில் நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்துள்ள நிலையில் குறித்த விமானப் படைதளத்தில் இருந்து தமது படையினர் வெளியேறியுள்ளதாக சிரிய அரசாங்கம் கூறியுள்ளது.
ஐ.எஸ்.ஐ.எஸ் என அறியப்பட்ட கிளர்ச்சியாளர்கள் சிரியாவின் கிழக்குப் பிராந்தியம் மற்றும் ஈராக்கின் வடபிராந்தியம் ஆகியவற்றின் பல பகுதிகளை அண்மைக்காலத்தில் கைப்பற்றியுள்ளனர்.
ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் கிளர்ச்சியளார்களுக்கு எதிராக விமானத் தாக்குதல்களை அமெரிக்கா மேற்கொண்டுள்ள போதிலும் சிரியாவில் அவ்வாறான தாக்குதல்கள் எதனையும் முன்னெடுக்கவில்லை.