பொதுவாக நாகப் பாம்புக்கு பழிவாங்கும் குணம் உண்டு. அதை அடித்து விட்டால் கொன்று விட வேண்டும். இல்லா விட்டால் பழிவாங்கி விடும் என்று சொல்வது உண்டு. ஆனால் கழுத்தை வெட்டி துண்டாக்கிய பிறகு நாகப்பாம்பு ஒருவரை கடித்து கொன்று விட்டது.

 இந்த நூதன சம்பவம் சீனாவில் நடந்துள்ளது. நாகபாம்பு கடித்து உயிரை விட்டவர் பெயர் பெங்பாங். இவர் ஒரு சமையல்காரர். அங்குள்ள ஒரு ஓட்டலில் பாம்பு கறி சமைத்தார். அதற்காக இந்தோ–சீனா கலப்பின நாகப்பாம்பின் தலையை வெட்டி துண்டாக்கி விட்டு அதன் உடல் பாகத்தின் கறியை எடுத்து உணவாக சமைத்தார்.

துண்டிக்கப்பட்ட பாம்பின் தலையை 20 நிமிடம் கழித்து குப்பை கூடையில் வீச சென்றார். அப்போது அந்த பாம்பின் தலை எதிர்பாராத விதமாக அவரை கடித்தது.

இதனால் பாம்பின் விஷம் அவரது தலைக்கு ஏறியது. மயங்கி விழுந்த அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இச்சம்பவம் அந்த ஓட்டலில் பாம்பு கறி சாப்பிட்டு கொண்டிருந்த வாடிக்கையாளர்களுக்கு தெரியவந்தது. இதனால் அவர்கள் மரண பயத்தில் அலறியடித்தபடி ஓட்டலை விட்டு ஓட்டம் பிடித்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றனர்.

இதுபோன்ற சம்பவம் எப்போதும் நடந்தது இல்லை. வழக்கத்துக்கு மாறாக நடந்துள்ளது. இது ஒரு விபத்து போன்றது என போலீசார் தெரிவித்தனர்.

Share.
Leave A Reply