இலங்­கை­யி­லுள்ள சில ஹஜ் பிர­யாண முக­வர்கள் கடந்த புதன்­கி­ழமை பொதுபல சேனா அமைப்பைச் சந்­தித்து கலந்­து­ரை­யா­டிய விவ­கா­ரத்­தை­ய­டுத்து 2014 ஆம் ஆண்­டுக்­கான புனித ஹஜ் யாத்­திரை தொடர்­பான சர்ச்சை புது­வ­டிவம் எடுத்­தி­ருக்­கி­றது.

ஹஜ் என்­பது முஸ்­லிம்கள் மீது இஸ்லாம் கட்­டா­ய­மாக்­கி­யுள்ள 5 ஆவது கட­மை­யாகும். பொரு­ளா­தார வச­தியும் உடல் பலமும் உள்ள ஒருவர் தனது வாழ் நாளில் ஒருமுறை சவூதி அரே­பி­யா­வி­லுள்ள மக்கா நக­ருக்குச் சென்று ஹஜ் கட­மையில் ஈடு­பட வேண்டும். சுமார் 3 மில்­லியன் பேர் வரு­டாந்தம் இக் கட­மைக்­காக மக்கா நகரில் ஒன்­று­கூ­டு­கின்­றனர்.

உலகின் சகல பாகங்­க­ளி­லு­முள்ள மில்­லியன் கணக்­கான மக்கள் இக் கட­மைக்கு வரு­வதன் கார­ண­மா­கவும் மக்­காவில் நடை­பெறும் அபி­வி­ருத்திப் பணிகள் கார­ண­மா­கவும்   சவூதி அர­சாங்கம் ஒவ்­வொரு நாட்­டுக்­கு­மான யாத்­தி­ரி­கர்கள் எண்­ணிக்­கையை   கோட்டா அடிப்­ப­டையில் மட்டுப்படுத்தியுள்ளது.

இதற்­க­மைய இலங்­கை­யி­லி­ருந்து  2800 பேர் மாத்­தி­ரமே இவ்­வ­ருடம் இக் கட­மைக்­காக செல்ல முடியும். ஓரிரு வரு­டங்­க­ளுக்கு முன்னர் வரை 5000 முதல் 8000 வரை­யான யாத்­தி­ரி­கர்கள் இலங்­கை­யி­லி­ருந்து செல்­வ­தற்கு அனு­மதி வழங்­கப்­பட்­டி­ருந்­தது.

இலங்­கை­யி­லி­ருந்து ஹஜ் யாத்­தி­ரி­கர்­களை மக்­கா­வுக்கு அழைத்துச் செல்லும் பணியில் நூற்­றுக்கு மேற்­பட்ட பிர­யாண முகவர் நிறு­வ­னங்கள் ஈடு­பட்டு வரு­கின்­றன.

இலங்­கைக்கு கிடைக்கப் பெற்­றுள்ள ஹஜ் கோட்­டா­வினை பிர­த­மரும் மத­வி­வ­கார அமைச்­ச­ரு­மான டி.எம். ஜய­ரத்­ன­வினால் நிய­மிக்­கப்­பட்ட சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி மற்றும் பிர­தி­ய­மைச்சர் ஏ.ஆர்.எம்.ஏ. காதர் ஆகி­யோரின் இணைத் தலை­மை­யி­லான ஹஜ் குழு முக­வர்­க­ளுக்கு பகிர்ந்­த­ளிக்­கி­றது.

முக­வர்­களின் அனு­பவம், தகுதி, கடந்த கால சேவைகள், அவர்கள் தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்­பா­டுகள் என்­ப­வற்றை அடிப்­ப­டை­யாகக் கொண்டு நேர்­மு­கப்­ப­ரீட்சை மூல­மா­கவே இந்த கோட்டா முக­வர்­க­ளுக்கு பகிர்ந்­த­ளிக்­கப்­ப­டு­கி­றது.

இருப்­பினும் இம்முறை ஹஜ் குழு முக­வர்­க­ளுக்கு அநீ­தி­யி­ழைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் பார­பட்­ச­மான முறையில் ஹஜ் கோட்டா பகிர்ந்­த­ளிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் சில ஹஜ் முகவர் அமைப்­புகள் வழக்குத் தொடர்ந்­தனர்.

fowzieஇதற்­க­மைய  ஏலவே அமைச்சர் பௌசி  தலை­மை­யி­லான குழு­வினால் தயா­ரிக்­கப்­பட்ட ஹஜ் கோட்டா பட்­டி­யலை இரத்துச் செய்­யு­மாறு உயர் நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டது.

இருப்­பினும் சவூதி அரே­பியா, உரிய காலக்­கெ­டு­வுக்குள் அனுப்பி வைக்­கப்­பட்ட அமைச்சர் பௌசியின் பட்­டி­ய­லுக்­க­மை­வாக தாம் அடுத்த கட்டப் பணி­களை தொடங்­கி­விட்­ட­தா­கவும் புதிய பட்­டி­யலை ஏற்றுக் கொள்ள முடி­யாது எனவும் அறி­வித்­து­விட்­டது.

ஆக, ஏலவே தயா­ரிக்­கப்­பட்ட பட்­டி­ய­லுக்கு அமை­வா­கவே இம் முறை ஹஜ் யாத்­தி­ரி­கர்­களை முக­வர்கள் அழைத்துச் செல்ல முடியும்.

இந்­நி­லை­யில்தான் உயர் நீதி­மன்றத் தீர்ப்­பையும் மீறி இந்த விவ­கா­ரத்தில் அர­சியல் தலை­யீ­டுகள் இடம்­பெ­று­வ­தாகக் குறிப்­பிட்டு சில ஹஜ் முக­வர்கள் கடந்த புதன்­கி­ழமை பொதுபல சேனாவின் நிறை­வேற்றுப் பணிப்­பாளர் டிலந்த விதா­ன­கேவைச் சந்­தித்து தமக்கு நீதியைப் பெற்றுத் தரு­மாறு கோரிக்கை விடுத்­துள் ­ளனர்.

“ஹஜ் விவ­கா­ரத்தில் எமக்கு அநீதி இழைக்­கப்­பட்­டுள்­ளது. இதில் அர­சியல் புகுந்து விளை­யா­டு­கி­றது. உயர் நீதி­மன்றத் தீர்ப்­பையும் மீறிய நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன.

என­வே தான் இந்த விட­யத்தில் பொதுபல சேனா தலை­யிட வேண்டும். அநீ­தி­யி­ழைக்­கப்­பட்­டுள்ள எமக்கு நீதியைப் பெற்றுத் தர வேண்டும்’’ என தம்மைச் சந்­தித்­த­வர்கள் வேண்­டு­கோள்­வி­டுத்­த­தாக டிலந்த விதா­னகே ஊட­கங்­க­ளுக்குத் தெரி­வித்­துள்ளார்.

இந்த விடயம் முஸ்­லிம்­களின் மார்க்க தலை­மைத்­து­வங்­க­ளு­டனும் அர­சியல் தலை­மைத்­து­வங்­க­ளு­டனும் சம்­பந்­தப்­பட்­டுள்­ளதால் இதில் பொதுபல சேனா தலை­யிட விரும்­ப­வில்லை என தாம்  குறித்த முக­வர்­க­ளிடம் தெரி­வித்­த­தா­கவும்   இருப்­பினும் பொதுபல சேனா இதில் தலை­யிட்­டா­லேயே தமக்கு நீதி கிடைக்கும் என முக­வர்கள் உறு­தி­யாக இருந்­த­தா­கவும் டிலந்த விதா­னகே மேலும் குறிப்­பிட்­டுள்ளார்.

இந்த சந்­திப்பில் கலந்து கொண்ட முக­வர்­களுள் ஒருவர் தாம் பொதுபல சேனாவை திட்­ட­மிட்டுச் சந்­திக்­க­வில்லை எனவும் தற்­செ­ய­லாக வீதியில் வைத்து டிலந்த விதா­ன­கேவை கண்டு கொண்ட சம­யத்­தில்தான் இது­பற்றி அவ­ருடன் கலந்­து­ரை­யா­டப்­பட்­ட­தா­கவும் தெரி­வித்­துள்ளார்.

இருப்­பினும் இதனை மறுத்­துள்ள டிலந்த, செவ்­வாய்க்­கி­ழமை இரவு தம்­மிடம் விடுக்­கப்­பட்ட வேண்­டு­கோ­ளுக்­கி­ணங்­கவே மறுநாள் புதன் கிழமை இச் சந்­திப்பு இடம்­பெற்­ற­தா­கவும் இது தற்­செ­ய­லான நிகழ்வு அல்ல எனவும் ஹஜ் விவ­கா­ரத்தில் பொதுபல சேனா தலை­யிட விரும்­ப­வில்லை எனவும் குறிப்­பிட்­டுள்ளார்.

இவ்­வாறு ஹஜ் முக­வர்கள் பொதுபல சேனாவைச் சந்­தித்­த­மை­யா­னது முஸ்­லிம்கள் மத்­தியில் பலத்த கண்­ட­னத்­தையும் விமர்­ச­னத்­தையும் தோற்­று­வித்­துள்­ளதை அவ­தா­னிக்க முடி­கி­றது.

கடந்த இரண்டு வரு­டங்­க­ளுக்கும்   மேலாக முஸ்­லிம்­களின் பள்­ளி­வா­சல்­களை தாக்­கியும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக மிக மோச­மான பிர­சா­ரங்­களை முன்­னெ­டுத்தும் வரு­கின்ற, அளுத்­க­மவில் கல­வரம் வெடிப்­ப­தற்கு வித்­திட்ட பொதுபல சேனா அமைப்பைச் சந்­தித்து நீதி கோரி­ய­மை­யா­னது முஸ்­லிம்­களை மாத்­தி­ர­மன்றி பொதுபல சேனாவின் செயற்­பா­டு­களை ஏற்றுக் கொள்­ளாத சகல மக்­க­ளையும் கோபத்தில் ஆழ்த்­தி­யுள்­ளது.

பொதுபல சேனா அமைப்பின் சிந்­த­னை­க­ளையோ செயற்­பா­டு­க­ளையோ எந்­த­வொரு முஸ்­லிமும்  ஏற்றுக் கொள்­வ­தில்லை. மட்­டு­மன்றி முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக இந்த அமைப்பு மேற்­கொள்ளும் செயற்­பா­டு­களை தமி­ழர்­க­ளிலும் பௌத்­தர்­க­ளிலும் கூட கணி­ச­மா­ன­வர்கள் எதிர்க்­கி­றார்கள்.

இந்­நி­லையில் முஸ்­லிம்­களில் உள்ள ஒரு குழு­வினர் அதுவும் புனித கடமை ஒன்று தொடர்­பான விட­யத்தில் இவ்­வாறு பொதுபல சேனா­விடம் சென்று மண்­டி­யிட்டு நீதி கோரி­யுள்­ள­மை­யா­னது மேற்­சொன்ன சகல தரப்­பி­ன­ரையும் சலிப்­ப­டையச் செய்­துள்­ளது.

இது தொடர்பில் சிங்­கள ஊட­கங்கள் கூட காட்­ட­மான விமர்­ச­னங்­களை முன்­வைத்­துள்­ளன. “ முஸ்­லிம்­களில் ஒரு­த­ரப்­பினர் பொதுபல சேனாவைச் சந்தித்து  தங்­க­ளது மார்க்க விட­யங்கள் தொடர்பில் தலை­யி­டு­மாறு    கோரி­யி­ருப்­பது சொர­ணை­யற்ற சிறு­பான்மைச் சமூ­க­மாக சித்­தி­ரித்துக் கொள்­வ­தற்கு ஒப்­பா­னது” என ஓர் சிங்­கள இணை­ய­தளம் கருத்து வெளி­யிட்­டுள்­ளமை இதற்கு சிறந்த எடுத்­துக்­காட்­டாகும்.

அதே­போன்று  நாட்டின் சட்டம், ஒழுங்­கு­களை மதிக்­காது நடந்து கொள்­கின்ற பொதுபல சேனா­விடம் சென்று தமக்கு அநீ­தி­யி­ழைக்­கப்­பட்­டுள்­ள­தாக முறை­யிட்­டதன் மூலம் ஒட்­டு­மொத்த முஸ்லிம் சமூ­கத்­தையும் காட்டிக் கொடுத்­துள்ள இந்த முகவர் அமைப்­பு­களை பகிஷ்­க­ரிக்க வேண்டும் எனவும் இந்த முகவர்­க­ளுடன் இணைந்து எந்­த­வொரு முஸ்­லிமும் ஹஜ் கட­மைக்குச் செல்லக் கூடாது எனவும் தற்­போது நாட­ளா­விய ரீதியில் பிர­சா­ரங்கள் முன்னெடுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

குறிப்­பாக பேஸ் புக், டுவிட்டர், வட்ஸ் அப், டெலி­கிராம் போன்ற சமூக ஊட­கங்­களை மையப்­ப­டுத்தி இன்று நாட­ளா­விய ரீதியில் இப் பிர­சாரம் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது. கடந்த வெள்­ளிக்­கி­ழமை சில முஸ்லிம் பகு­தி­களில் இது தொடர்பில் மக்­களை அறி­வூட்டும் துண்­டுப்­பி­ர­சு­ரங்­களும் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன.

Haj-Pilgrimageஹஜ் விவ­காரம் என்­பது இலங்­கையில் பாரிய பிரச்­சி­னை­யாக உரு­வெ­டுத்­துள்­ளது. உரிய கொள்கைத் திட்­டங்­களோ ஒழுங்­க­மைக்­கப்­பட்ட வேலைத்­திட்­டங்­களோ இல்­லாது ஹஜ் கோட்டா பகி­ரப்­ப­டு­வதும், முக­வர்கள் பணத்தை மட்­டுமே குறி­யாகக் கொண்டு செயற்­ப­டு­வதும் கடந்த பல வரு­டங்­க­ளாக மக்கள் மத்­தியில் பலத்த விமர்­ச­னங்­களைத் தோற்­று­வித்தே வந்­துள்­ளது.

குறிப்­பாக முகவர் அமைப்­புகள் யாத்­தி­ரி­கர்­களை ஏமாற்றி நிதி மோச­டி­களில் ஈடு­ப­டு­வதும் புனித கடமை என்றும் பாராது இஸ்­லாத்­துக்கு முர­ணான செயற்­பா­டு­களில் ஈடு­ப­டு­வ­தும் கண்­டிக்­கத்­தக்­க­தாகும்.

இன்று அதன் தொட­ரில்தான் சமூ­கத்தின் உணர்­வு­களை மதிக்­காது பணத்தை மாத்­தி­ரமே குறி­யாகக் கொண்டு செயற்­பட்­ட­தால்தான் இவர்கள் பொதுபல சேனாவிடம் மண்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே இவ்வாறான சமூ கத்தைக் காட்டிக் கொடுக்கின்ற முகவர்கள் தொடர்பில் முஸ்லிம்கள் மிகவும் அவதா னமாக நடந்து கொள்ள வேண்டும்.

முஸ்லிம்களின் மார்க்க தலைமைத்துவ மான அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா இதுபற்றி கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

அதேபோன்று சிவில் சமூக அமைப்புக ளான தேசிய சூறா சபை, முஸ்லிம் கவுன் ஸில் உள்ளிட்ட அமைப்புகளும் இது விட யத்தில் தலையிட்டு நடவடிக்கைகளை எடுக்க முன்வர வேண்டும்.

எதிர்காலத்தில் ஹஜ் விவகாரத்தை நெறிப்படுத்தி ஓர் ஒழுங்கமைப்பின் கீழ் கொண்டுவருவதற்கான வேலைத்திட் டத்தை ஆரம்பிப்பதற்கான தருணமாக இத னைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இன்றேல் நாளை முஸ்லிம்களின் மார்க்க விடயங்களில் தலையிட்டு தீர்ப்புச் சொல் கின்ற பஞ்சாயத்துக்காரர்களாக பொதுபல சேனாவினர் மாறிவிடுவார்கள். அதன் பிற்பாடு கைசேதப்படுவதில் எந்தவொரு அர்த்தமும் இராது.

பைஸ் –

Share.
Leave A Reply