ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சற்று முன்னர் கைது செய்யப்பட்டள்ளார்.

மாதிவெலயில் அமைந்துள்ள அவரின் வீட்டில் வைத்து அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

image_e908b4025aபாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கு பிடியாணை ஒன்றை பெற்றுக் கொள்ளமாறு கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பணிப்பாளருக்கு சட்டமா அதிபர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இதனையடுத்து ரஞ்சன் ராமநாயக்கவை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு நுகேகொட நீதவான் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்தது.

அதனடிப்படையில் அவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Share.
Leave A Reply