உலகில் உள்ள ஏழு கண்டங்களில் ஆறு கண்டங்கள் நாடுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. உலகின் ஒவ்வொரு கண்டத்திலும் அமைந்துள்ள நாடுகளில் மழை, வெயில், குளிர் என பருவநிலை மாறுபாடுகள்  உள்ளன. அதிக மக்கள் தொகை உள்ள கண்டமாக  நாம் வாழும் ஆசியா கண்டம் உள்ளது.

சில நூற்றாண்டுகளுக்கு முன்பு மனிதன் இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ்ந்து வந்தான். கால மாற்றத்தினால் நாகரீகம் வளர்ச்சி அடைய இயற்கையும், காடுகளும் சிறிது சிறிதாக அழிந்து வந்தன.
மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாக காடுகள், ஏரிகள், குளங்கள் அழிக்கப்பட்டு குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டதை இதற்கு உதாரணமாக கூறலாம்.
 
அதன் பின்னரே பூமியில் ஆரோக்கியமாக உயிர்வாழ இயற்கை மிக முக்கியம் என மனிதன் உணர்ந்தான்.
நாகரீக உலகத்தில் இயற்கை அழிக்கப்படுவதை இன்றைய தலைமுறையினர் கூட விரும்புவதில்லை எனலாம்.
ஒரு நாட்டில் வாழக்கூடிய சூழ்நிலை என்பதை கணக்கில் எடுத்துக்கொண்டால், கல்வி, பொருளாதாரம் ஆகியவற்றை விட முன்னிலையில் இருப்பது சுற்றுச்சூழலும், இயற்கை வளங்களான சுத்தமான நீர், நிலம், காற்று ஆகியவையே.
இந்நிலையில், கல்வி, வாழ்க்கைத்தரம், பாதுகாப்பு, பொருளாதாரம் போன்ற அம்சங்களை முன்வைத்து 2020ம் ஆண்டிற்கான தலைசிறந்த நாடுகளின் பட்டியலை, அமெரிக்க செய்தி மற்றும் உலக அறிக்கை என்ற பத்திரிக்கையும், வார்டன் பள்ளி பென்சில்வேனியா பல்கலைக்கழகம் மற்றும் பாவ் என்ற உலகளாவிய ஆலோசனை மையமும் சேர்ந்து வெளியிட்டுள்ளன.
202001161512075473_1_switzerland-iStock._L_styvpf
2020ம் ஆண்டிற்கான அதன் அறிக்கையில் பட்டியலிடப்பட்டுள்ள நாடுகள் வருமாறு:-
இயற்கையான சூழலில் வாழக்கூடிய நாடுகள்:
1) சுவீடன்
2) சுவிட்சர்லாந்து
3) பின்லாந்து
மிகவும் பலம் வாய்ந்த நாடுகள்: 1) அமெரிக்கா 2) ரஷியா 3) சீனா
கல்வியில் சிறந்த நாடுகள்: 1) அமெரிக்கா 2) பிரிட்டன் 3) கனடா
தொழில் தொடங்க ஏற்ற நாடுகள்: 1) தாய்லாந்து 2) மலேசியா 3) சீனா
பெண்களுக்கான நாடுகள்: 1) டென்மார்க் 2) ஸ்வீடன் 3) நெதர்லாந்து
சிறப்பான வாழ்க்கைத்தரம் உடைய நாடுகள்: 1) கனடா 2) டென்மார்க் 3) ஸ்வீடன்
அனைத்து விதத்திலும் சிறந்த நாடுகள்:  1) சுவிட்சர்லாந்து 2) கனடா 3) ஜப்பான் 4) ஜெர்மனி 5) ஆஸ்திரேலியா 6) பிரிட்டன்
7) அமெரிக்கா 8) ஸ்வீடன் 9) நெதர்லாந்து 10) நார்வே.
Share.
Leave A Reply