தனி ஒருவன் என்ற படம் மூலம் நாம் அனைவரையும் அசத்தும் அளவிற்கு ஸ்டைலிஷ் வில்லனாக நடித்தவர் நடிகர் அரவிந்த் சாமி.
அப்படத்திற்கு பிறகு அடுத்தடுத்து நல்ல கதைகள் தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது அவர் தலைவி என்ற பெயரில் கங்கனா ரனாவத் நடிக்கும் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்தில் எம்ஜிஆராக நடிக்கிறார்.
முதன்முதலாக படத்தில் அவரின் லுக் புகைப்படம் வெளியாகியுள்ளது. அதைப்பார்த்த ரசிகர்கள் வாவ் அரவிந்த் சாமியா இது என ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.