இலங்கைக்கான நோர்வே தூதுவர் டிரின் ஜொரன் லீ எஸ்கடேலினால் கிளிநொச்சியில் இன்று (24) சூரிய சக்தியினால் இயங்கும் மிதக்கும் மின் பிறப்பாக்கி திறந்து வைக்கப்படவுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் உள்ள பொறியியல் பீடத்திலேயே 42 கிலோ வோட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்யக் கூடிய சூரிய சக்தியினால் இயங்கும் மின் பிறப்பாக்கி திறந்து வைக்கப்படவுள்ளது.
2017 ஆம் ஆண்டு முதல் யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்திலுள்ள பொறியியல் பீடத்தினாலும் மேற்கு நோர்வேயிலுள்ள பிரையோக விஞ்ஞான பல்கலை கழகத்தினாலும் இணைந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலமாக இந்த சூரிய சக்தியால் இயங்கும் மின் பிறப்பாக்கி உபகரணம் உருவாக்கப்பட்டுள்ளது.
நோர்வேயிலுள்ள பல்கலைக்கழகத்துக்கும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கும் இந்த ஆய்வை மேற்கொள்ள கொழும்பிலுள்ள நோர்வே தூதரகம் அனுசரணை வழங்கியது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகமும் நோர்வே பல்கலைக்கழகமும் இணைந்து மேற்கொண்ட இந்த ஆய்வுக்கு நோர்வேயிலுள்ள சில தனியார் கம்பனிகளும் இக்குனர் எனும் நோர்வே சக்திவலு குழுவும் வழிகாட்டுதல்களையும் அனுசரணையையும் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது