இந்தோனேசியாவில் தனது தாயின் மருத்துவச் செலவுக்காக சிறுமி ஒருவர் பாட்டுப் போட்டியில் வென்றதும், அவர் பாடுவதை டிவி.,யில் பார்த்தப்படியே தாய் உயிரிழந்த சம்பவம் கேட்போரை கலங்க வைத்துள்ளது.

இந்தோனேசியாவில் லிகா தங்தத் என்ற பாடல் போட்டி நடந்தது. இதில் வென்றவர்களுக்கு 28,000 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.26 லட்சம்) பரிசாகக் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

20200124_Nurjannah_LIDA_2020_இதனை அறிந்த ஜன்னா என்ற 14 வயது சிறுமி ஒருவர், உயிருக்குப் போராடும் தனது தாயின் மருத்துவச் செலவுக்காக போட்டியில் பங்கேற்றார்.

இதில் தாயை நினைத்து உருக்கமாகப் பாடி அனைவரையும் அசத்தினார். அரையிறுதிப் போட்டியில் பங்கேற்ற ஜன்னா அதில் வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு தகுதியானார்.

அவர் இறுதிச்சுற்றுக்கு தகுதியான தகவல் மேடையில் அறிவிக்கப்பட்ட போது, இந்த மகிழ்ச்சியான தகவலை தனது தாயிடம் போனில் சொல்ல ஜன்னா விரும்பினார்.

அப்போது, அவரது பாடலை டிவியில் பார்த்துக் கொண்டே ஜன்னாவின் தாய் உயிரிழந்ததாக அவரது உறவினர் தெரிவித்தார்.

இதனைக் கேட்ட அந்தச் சிறுமி மேடையிலேயே கதறி அழுதார். இதனைக் கண்டு அரங்கில் இருந்த அனைவரும் கண்ணீர் விட்டனர். நேரலையில் டிவி.,யில் பார்த்துக் கொண்டிருந்தவர்களையும் இது சோகத்தில் ஆழ்த்தியது. சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாகியது.

Share.
Leave A Reply