சீன வைத்­தி­ய­சா­லை­யொன்றில் இரவும் பகலும் உறங்­காமல் பணி­யாற்­று­வதால் மருத்­து­வர்கள் அழு­கின்ற காட்சி அடங்­கிய வீடியோ, சீன சமூக வலைத்­த­ளங்­களில் வெளி­யா­கி­யுள்­ளது.

கொரோனா வைர­ஸினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­காக இம்­ம­ருத்­து­வர்கள் உறங்­காமல் நீண்­ட­நேரம் பணி­யாற்­று­வதால் களைப்­ப­டைந்­துள்­ளனர் எனக் கூறப்­ப­டு­கி­றது. எனினும், இந்த வீடியோ உண்­மை­யா­னது அல்ல என சீன அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர்.

 doctors-3

கொரோனா வைர­ஸினால் வெகு­வாக பாதிக்­கப்­பட்ட வுஹான் நக­ரி­லுள்ள வைத்­தி­ய­சா­லை­யொன்றில் இந்த வீடியோ பதிவு செய்­யப்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மருத்­து­வரின் மேலங்கி அணிந்த பெண்­ணொ­ருவர், இனியும் நான் இங்­கி­ருக்க முடி­யாது எனக் கூறி அழு­வ­துடன், ஏனைய பெண்கள் அவரை தேற்றும் காட்சி வீடி­யோவில் இடம்­பெற்­றுள்­ளது.

மற்­றொரு வீடி­யோவில் வைத்­தி­யாலை முகா­மை­யாளர் ஒரு­வரை ஆண் மருத்­துவர் ஒருவர் திட்டும் காட்சி இடம்­பெற்­றுள்­ளது.

இந்த வீடி­யோக்கள் சமூக வலைத்­த­ளங்­களில் வேக­மாக பர­வின.

எனினும், இந்த வீடி­யோக்கள் உண்­மை­யா­னவை அல்ல என சீன அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர்.

காட்­சி­கள் பதிவு செய்­யப்­பட்ட பின்னர், ஒலிப்­ப­திவு செய்­யப்­பட்­டுள்­ள­தாக சீன அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர்.

 Prime-minsiter-Keqiang-1

இதே­வேளை, சீனப் பிர­தமர் லீ கேகியாங், வுஹான் நகரில் நேற்­று­முன்­தினம் கொரோனா வைர­ஸுக்குச் சிகிச்­சை­ய­ளிக்கும் மருத்­து­வர்­களை சந்­தித்து உரை­யா­டினார்.

வுஹான் நகரில் 10 தினங்­களில் நிர்மாணித்து முடிக்கப்படவுள்ள வைத்தியசாலை நிர்மாணப் பணிகளையும் அவர் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.

Prime-minsiter-Keqiang

படம்: சீனப் பிரதமர் லீ கேகியாங்

வீடியோ:

Share.
Leave A Reply