மஸ்கெலியா சாமிமலை தொங்க தோட்டத்தை சேர்ந்த இளம் பெண்ணொருவரின் சடலம் வைத்தியர் ஒருவரி்ன் வீட்டிலிருந்து எரிகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளது.
சாமிமலை தொங்க தோட்டத்தை சேர்ந்த சேர்ந்த பெண்ணொருவர் மாலம்பே பகுதியில் உள்ள வைத்தியர் ஒருவரின் வீட்டில் பணிபுரிந்து வந்த நிலையில் குறித்த பெண்ணின் சடலம் எரிகாயங்களுடன் அவர் பணிபுரிந்த வீட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளதோடு, அவரின் மரணத்தில் மர்மம் நீடிப்பதாக குறித்த பெண்ணின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த பெண் தீமூட்டி தற்கொலை செய்துகொண்டாரா அல்லது தீ வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளாரா என்ற போர்வையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.