யாழில் கடந்த இரு நாட்களில் மூவர் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் தற்கொலைக்கு எதிராக பல விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்ட்ங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் சமீப நாட்களாக தற்கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
கடந்த இரு தினங்களில் மட்டும் இரு மாணவிகள் உட்பட மூவர் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளனர்.
கோப்பாய் தெற்கு பகுதியை சேர்ந்த ஞானசேகரம் சத்தியேஸ்வரன் (வயது 32) என்ற இளைஞன் இன்று வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவ்வெறு மீட்கப்படடவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
திருமணம் ஆகாத மன விரக்தியில் அவர் உயிரை மாய்த்துக் கொண்டதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் இருவேறு தற்கொலை சம்பவத்தில் இரு மாணவிகள் உயிரிழந்துள்ளனர்.
யாழ் சங்கிலியன் வீதியில் உள்ள வீட்டில் ஜெயபாலசுந்தரம் சிவசாயினி(வயது 20) என்ற மாணவி யாரும் இல்லாத நேரத்தில் கயிற்றில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
மேலும் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்கு அண்மையில் வசிக்கும் சிவரூபன் றிஸ்வினி(வயது 17) என்ற மாணவி வீட்டில் உள்ளவர்கள் வெளியில் சென்றிருந்த சமயம் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.