பெங்களூரில் ஆபாச படம் பார்க்க கட்டாயப்படுத்திய பெண் டாக்டருக்கு கணவரால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பெங்களூர்:உத்தரபிரதேசத்தை சேர்ந்த 33 வயதான ஐ.டி. நிறுவன ஊழியர் ஒருவர் தனது திருமணத்துக்கு பெண் தேடி ஆன்லைனில் திருமண வலைதளத்தில் பதிவு செய்திருந்தார்.
அப்போது கொல்கத்தாவை சேர்ந்த 33 வயதான பெண் டாக்டர் ஒருவர் அறிமுகமானார். இருவரும் நேரில் சந்தித்து பேசி திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர்.
கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு கிழக்கு பெங்களூரில் தங்கி தங்களது வாழ்க்கையை தொடங்கினர்.
அப்போது பெண் டாக்டர் திருமணத்துக்கு முன்பு தனக்கு வாலிபர் ஒருவருடன் பழக்கம் இருந்ததாகவும், பின்பு அவரை பிரிந்து விட்டதாகவும் கணவரிடம் கூறினார். அதை அவர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக சென்ற நிலையில் புது ரூபத்தில் இவர்களின் வாழ்க்கையில் புயல் வீசத் தொடங்கியது.
பெண் டாக்டர் தனது கணவரை ஆபாச வீடியோக்கள் பார்க்குமாறு கட்டாயப்படுத்தியதோடு, அந்த காட்சிகளை போன்று நடந்து கொள்ளுமாறும் வற்புறுத்தி உள்ளார்.ஆபாச வீடியோக்கள் பார்ப்பதை ஐ.டி. ஊழியர் விரும்பவில்லை. எனினும் அவர் தனது மனைவியின் விருப்பத்தை பூர்த்தி செய்ய எண்ணினார்.
இந்நிலையில் மனைவியின் செல்போனில் ஒரு ஆபாச வீடியோ இருப்பதையும் அதில் தனது மனைவியுடன் வேறு ஒரு வாலிபர் இருப்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.இதுகுறித்து அவர் மனைவியிடம் கேட்ட போது அந்த வாலிபர் தனது முன்னாள் காதலன் என கூறினார். மேலும், இந்த பழைய வீடியோவை காட்டி மிரட்டி வருவதாகவும் கூறிய பெண்டாக்டர் தன்னை அப்பாவி போல காட்டிக் கொண்டார்.
இந்நிலையில் ஜனவரி 3-வது வாரத்தில் ஐ.டி. ஊழியர் ஆன்லைனில் தனது மனைவி வேறொரு வாலிபருடன் நெருக்கமாக இருக்கும் ஆபாச வீடியோவை பார்த்துள்ளார்.
இதுபற்றி அவர் மனைவியிடம் கேட்ட போது அவர் திருமணத்திற்கு முன்பு பலருடன் தொடர்பில் இருந்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.
ஆனால் இந்த வீடியோக்கள் எப்படி ஆன்லைனில் வெளியானது என்பது எனக்கு தெரியாது என கூறினார்.மனைவியின் செயல்களால் வேதனை அடைந்த ஐ.டி. ஊழியர் அவரை பிரிய முடிவு செய்து விவாகரத்து கேட்டு மனு செய்தார். அதன் பேரில் ஆலோசனை மைய நிர்வாகிகள் இருவரையும் நேரில் அழைத்து பேசி ஆலோசனை வழங்கி வருகின்றனர்.