இந்தோனேசியாவில் சகதியில் சிக்கியவருக்கு மனிதக் குரங்கு ஒன்று உதவிக்கரம் நீட்டிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தோனேசியாவின் போர்னியோ தீவில் அழிந்து வரும் மனித குரங்குகளை பாதுகாப்பதற்காக தனியார் அமைப்பு ஒன்று இயங்கி வருகிறது.
அந்த அமைப்பை சேர்ந்த ஊழியர் ஒருவர் குரங்குகள் அதிகம் வாழும் வனப்பகுதியில் உலவும் பாம்புகளை பிடித்து வெளியேற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார்.