இளம்பெண் ஒருவர் ஆணாக மாறி சக தோழியை திருமணம் செய்த விநோத சம்பவம் இந்தியாவின் ஒடிஷா மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

ஒடிஷா மாநிலம் மல்கங்கிரி மாவட்டத்தை சேர்ந்த இரண்டு இளம்பெண்கள் கடந்த 3 வருடங்களாக தோழிகளாக இருந்து வருகின்றனர். இந்த நிலையில், இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளனர்.

அதன்படி ஒருவர் ஆணாக மாற முடிவு செய்துள்ளனர். இதற்காக இருவரில் ஒரு பெண் கடந்த ஆண்டு ஜூலை மாதம் டெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் ரூ.7 லட்சம் செலவில் பாலின மறுசீரமைப்பு அறுவைச் சிகிச்சை செய்தார்.

இவர்களது திருமணத்துக்கு இருவரது பெற்றோரும் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. இதனை அடுத்து கடந்த 4 ஆம் திகதி இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

பாலின மாற்று அறுவை சிகிச்சை, பாலின மறுசீரமைப்பு என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு நபரின் பாலியல் கட்டமைப்பை, தோற்றம் மற்றும் செயல்பாடு ஆகிய இரண்டின் அடிப்படையில் ஒரு ஆணின் தோற்றத்திற்கு பெண்ணை மாற்றும் சிகிச்சை முறை எனவும் கூறப்படுகின்றது.

Share.
Leave A Reply