யாழ்ப்பாணம் நகரில் இயங்கும் கிறீம் ஹவுஸ் ஒன்றில் பணியாற்றும் 17 வயதுடைய நபர் ஒருவர் மின்சார தாக்கி உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் உள்ள கிறீம் ஹவுஸ் ஒன்றில் நேற்று இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
சங்கானை, தேவாலய வீதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
“கட்டடத்தின் நான்காம் மாடியில் உருளைக் கிழங்கு வெட்டும் உபகரணத்தில் சிறுவன் வேலையில் இருந்துள்ளார். அந்த உபகரணத்துக்கான மின் இணைப்பு வயரில் பழுது இருந்துள்ளது.
அதனை குறித்த இளைஞன் மிதித்துள்ள நிலையில் மின்சாரம் தாக்கி மயக்கமடைந்த நிலையில் அவர் வைத்தியசாலைக்கு எடுத்துவரப்பட்ட போதும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என வைத்திய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அத்தோடு சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.