கொரோனா வைரஸ் காரணமாக அமெரிக்காவில் 100,000 முதல் 200,000 வரையிலானவர்கள் உயிரிழக்கலாம் என அமெரிக்காவின் தொற்றுநோய் மற்றும் ஒவ்வாமை குறித்த தேசிய நிறுவகத்தின் இயக்குநர் அன்தனி பவுசி  Anthony Fauci தெரிவித்துள்ளார்.

சிஎன்என்னிற்கு இதனை அவர் தெரிவித்துள்ளார்.

anthony_fuaciசர்வதேச நோய் தொற்று முடிவிற்கு வருவதற்கு முன்னர் ஒரு இலட்சம் முதல் இரண்டு லட்சம் வரையிலானவர்கள் பலியாகலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

மில்லியன் கணக்கானவர்கள் பாதிக்கப்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் இவ்வாறான மதிப்பீடுகள் பிழையானவையாக மாறலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

coronavirus-nevadaஆனால் நியுயோர்க்கில் பாரதூரமான பிரச்சினை காணப்படுகின்றது என்பது எங்களிற்கு தெரியும எனகுறிப்பிட்டுள்ள பவுசி அந்த பிரச்சினை தீவிரமடையலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Share.
Leave A Reply