கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 92 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் ஆயிரத்தை கடந்தது
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான இந்தியாவில் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
நேற்று இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 92 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நான்கு பேர் பலியாகியுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளார். மேலும் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1071 ஆக உயர்ந்துள்ள நிலையில் பலியானோரின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது.