கொவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்த இரண்டாவது நபரின் குடும்ப உறுப்பினர்கள் 13 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு நேற்றையதினம் உயிரிழந்த 2 ஆவது நபர் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்கைக்காக நீர்கொழும்பு பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் நிலையில் நேற்றையதினம் உயிரிழந்தார்.
தற்போது குறித்த தனியார் வைத்தியசாலை ஊழியர்கள் அனைவரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, உயிரிழந்த நபரின் இறுதிக்கிரியைகள் நேற்றிரவு நீர்கொழும்பு மாநகர சபை பொது மயான பூமியில் இடம்பெற்றிருந்தது.
நீர்கொழும்பு, போரதொட்டை பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் என்டன் பெர்ணான்டோ தெரிவித்தார்.
குறித்த தொற்றாளர் முதலில் நீர் கொழும்பு பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றிலேயே அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பின்னர் அங்கிருந்து நீர்கொழும்பு வைத்தியசலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந் நிலையிலேயே நீர்கொழும்பு வைத்தியசாலையில் அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையின் பிரதிப் பனிப்பாளர் என்டன் பெர்ணான்டோ கூறினார்.
இதனையடுத்து குறித்த தொற்றாளர் அனுமதிக்கப்பட்ட வைத்தியசாலையின் சிகிச்சை அறை சீல் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.