அமெரிக்காவில் கொரோனா மரணங்கள் 80 ஆயிரத்தையும் தாண்டியுள்ளது. அமெரிக்காவில் மட்டும் இதுவரை 81,795 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

உலக நாடுகள் அனைத்திலும் கொரோனா தொற்று நோய் தாக்கம் மிக தீவிரமாக இருந்து வருகிறது. உலக நாடுகள் அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 42,53,802 ஆக உயர்ந்துள்ளது.

 

கொரோனாவால்  உயிரிழந்தோர்  எண்ணிக்கை  2,87,250 ஆகும். கொரோனா பாதிக்கப்பட்டு உலக நாடுகளில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 15,27,002 ஆகவும் அதிகரித்திருக்கிறது.

நாடுகளின் அடிப்படையில் அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,85,834 ஆக உயர்ந்திருக்கிறது.

கொரோனாவால் ஏற்பட்டிருக்கும் உயிரிழப்புகள் 81,795 ஆகவும் உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து 2,62,225 பேர் குணமடைந்தும் உள்ளனர்.

அமெரிக்காவைத் தொடர்ந்து உலக நாடுகள் அளவில் கொரோனா பாதிப்பில் 2-வது இடத்தில் ஸ்பெயின் உள்ளது. இங்கு மொத்தம் 2,68,143 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

மொத்தம் 26,744 பேர் இங்கு உயிரிழந்துள்ளனர். இங்கிலாந்தில் கொரோனா மரணங்கள் 32,065 ஆகவும் பாதிப்பு 2,23,060 ஆகவும் இருக்கிறது.

உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில்  4வது இடத்தில் ரஷ்யா உள்ளது. ரஷ்யாவில் 221,344 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

இத்தாலியில் கொரோனாவால் 30,739 பேர் மரணித்துள்ளனர். பிரான்ஸில் 26,643 பேரும் பிரேசிலில் 11,625 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடதக்கது.

Share.
Leave A Reply