இலங்கையில் கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்டிருந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

குவைத்திலிருந்து நாடு திரும்பி ஹோமாகம வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த 45 வயதான ஆண் ஒருவரே உயிரிழந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, இலங்கையில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.

Share.
Leave A Reply