நியூசிலாந்து கொரோனா தொற்று இல்லாத நாடாக மாறியுள்ளது. அங்கு தற்போது புதிதாக கொரோனா பாதிப்பு எதுவும் பதிவாகாவில்லை.

நியூசிலாந்தில் கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி முதன்முறையாக கொரோனா தொற்று பாதிப்பு பதிவானது.

5 மில்லியன் சனத்தொகை கொண்ட நியூசிலாந்தில் 1,154 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதில் 1,132 பேர் பூரண குணமடைந்தும், 22 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த 7 வாரங்கள் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் நியூசிலாந்தில விதிக்கப்பட்டது.

கடந்த மே 14 ஆம் திகதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது. கடந்த 17 நாட்களில் புதிதாக கொரோனா பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை.

இந்நிலையில், இது குறித்து நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன்  செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில்,

“எந்தவொரு கொரோனா தொற்றும் தற்போது இல்லை என்று கூறியபோது, “ஒரு சிறிய நடனம்” ஆடினேன் எனத் தெரிவித்தார்.

மேலும், நியூசிலாந்து நான்கு கட்ட ஊரடங்கு தளர்வில் இறுதியாக குறைந்த பாதிப்பு நிலை ஒன்றுக்கு செல்வதாக ஜெசிந்தா அறிவித்தார்.

‘ உலகளாவிய தொற்றுநோய்க்கு மத்தியில் வாழ்க்கை இயல்பானதாக உணர்கிறது. இப்போது நாம் முதலாம் நிலைக்கு செல்ல அமைச்சரவை ஒப்புகொண்டுள்ளது’ என கூறினார்.

அத்துடன், பொதுமக்கள் கூடுவதற்கும், சமூக விலகல் உள்ளிட்ட அனைத்து கட்டுப்பாடுகளும் தளர்த்தப்படுகிறது.

அனைத்து வாகனங்களும் இயக்க அனுமதி அளிக்கப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு மட்டும் கட்டுப்பாடுகள் தொடர்வதாக அவர் மேலும் அவர் தெரிவித்தார்.

Share.
Leave A Reply