மட்டக்களப்பில் ஓடிக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் திடீர் என தீபிடித்து எரிந்துள்ளது.
இந்த நிலையில் அதனை செலுத்திச்சென்றவர் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளார்.
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பார் வீதியில் உள்ள வேதாரணியம் சதுக்கம் பகுதியில் இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
ஏறாவூரில் இருந்து மட்டக்களப்பு ஊடாக காத்தான்குடி நோக்கிச்சென்றவரின் மோட்டார் சைக்கிளே திடீர் என தீபிடித்துள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிளை செலுத்திச்சென்றவர் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளதுடன் குறித்த பகுதியில் நின்றவர்களினால் மோட்டார் சைக்கிளில் இருந்த தீ கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.
இந்த தீ காரணமாக மோட்டார் சைக்கிள் பெரும் பகுதி எரிந்து நாசமாகியுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.