யாழ்ப்பாணத்தில் மருத்துவமனை ஊழியர் போல, மோட்டார் சைக்கிளில் ஹெரோயின் போதைப் பொருளை கடத்திய யுவதி கைது செய்யப்பட்டிருக்கின்றார்.

50 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் பயணிப்பது தொடர்பாக யாழ்.மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு இரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, நடாத்தப்பட்ட அதிரடி சோதனை நடவடிக்கையின்போது மருத்துவ குறியீடு பொறித்த மோட்டார் சைக்கிளில் குறித்த பெண் யாழ்.அரியாலை பகுதியில் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.

யாழ்ப்பாணம், அரியாலை பூம்புகாரைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயான 42 வயதுப் பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடைய முக்கியமான நபர் சிறையில் உள்ளதாகவும், அவரே இவற்றை வழிநடத்துவதாகவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply