திருவள்ளூர்: முதலிரவில் புது பொண்டாட்டியை கடப்பாறையாலேயே அடித்து கொன்றுவிட்டார் கணவர்.. அதுமட்டுமில்லை.. தோப்புக்குள் ஓடிப்போய் வேப்பமரத்தில் பிணமாக தொங்கியும் விட்டார்..

முதலிரவில் இவர்கள் இருவரும் பேச ஆரம்பித்ததால் வந்த வினை.. இந்த கொடுமை திருவள்ளூரில் நடந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ளது காட்டூர் கிராமம்.. இங்கு வசித்து வந்தவர் நீதிவாசன்.. இவருக்கு சந்தியா என்பவருடன் வீட்டில் பெரியவர்கள் பார்த்து நிச்சயம் செய்தனர். சந்தியாவுக்கு 20 வயதாகிறது.

ரெட்டிபாளையம் அடுத்த சோமஞ்சேரி என்ற கிராமத்தை சேர்ந்தவர் நீதிவாசன். இவருக்கும் சடையங்குப்பம் கிராமத்தை சேர்ந்த சந்தியா என்பவருக்கும் நேற்று கல்யாணம் நடந்தது..

ஊரடங்கு என்பதால், வீட்டிலேயே இந்த கல்யாணம் மிக எளிமையாக நடந்தது. புதுமண தம்பதிக்கு முதலிரவு ஏற்பாடு சிறப்பாக செய்யப்பட்டது.. பிறகு அந்த அறைக்குள் தம்பதி இருவரும் சென்றனர்.. அப்போதுதான் தகராறு ஏற்பட்டுள்ளது… வாக்குவாதம் முற்றி உள்ளது..

ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த நீதிவாசன், சந்தியாவை கடப்பாறை கம்பியால் அடித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். அந்த ரூமிலேயே சந்தியா ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்..

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சந்தியாவின் உடலை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்தனர்..

ஆனால் மாப்பிள்ளை எஸ்.ஆகி விட்டார்.. தலைமறைவாக இருந்த நீதிவாசனை போலீசார் தேடி வந்தனர்… அப்போதுதான் தோப்பு ஒன்றில் உள்ள வேப்பமரத்தில் நீதிவாசன் பிணமாக தூக்கில் தொங்கி கொண்டிருந்தார்.

போலீசுக்கு பயந்து இந்த தற்கொலையை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அவரது உடலையும் போலீசார் கைப்பற்றி போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர்.

மணமக்கள் ஒரே நாளில் இப்படி பிணமாக கிடந்ததை கண்டு இரு குடும்பத்தினரும் கதறி கதறி அழுதனர். அந்த ரூம் முழுக்க சந்தியாவின் ரத்தம் சிதறி கிடந்தது. முதலிரவில் இவர்கள் 2 பேரும் என்ன பேசினார்கள்? எதனால் இவர்களுக்குள் பிரச்சனை வந்தது என்றே தெரியவில்லை?

இது தொடர்பாக போலீசார் விசாரித்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் 2 பேரின் செல்போனையும் ஆய்வு செய்து வருகின்றனர்.. கொலையும் செய்துவிட்டு புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட அச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Share.
Leave A Reply