ஈரோடு: விடிய விடிய அடங்காத மனைவி, ஃபேஸ்புக் காதலனுடன் சாட்டிங் செய்வதை பார்த்த கணவர் ஆவேசமாகிவிட்டார்.. பொறுமை இழந்த கணவர், மனைவியை இழுத்து பிடித்து மொட்டையும் அடித்து வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டார்.

இந்த சம்பவம் ஈரோட்டில் நடந்துள்ளது. ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகதியை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி.. இவரது மனைவி லோகநாயகி.. கல்யாணம் ஆகி 17 வருஷம் ஆகிறது.

. 16 வயதில் ஒரு மகனும் 15 வயதில் ஒரு மகளும் உள்ளனர். கடந்த சில வருஷங்களாகவே லோகநாயகி ஃபேஸ்புக்கிலேயே மூழ்கி வந்துள்ளார்.. அப்படி அறிமுகமானவர்தான் சண்முகையா.

இவரும் ஈரோட்டை சேர்ந்தவர்தான்.. எந்நேரமும் இவருடன் சாட்டிங் செய்தபடியே இருந்திருக்கிறார் லோகநாயகி.

இந்த விஷயம் தட்சிணாமூர்த்தி தெரியவந்தது.. ஆனால் லோகநாயகி அதை காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை.. அழகா இருந்தால் அப்படிதான் போன் பண்ணி பேசுவாங்க என்று கணவனுக்கு பதிலடி தந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் இந்த அக்கிரமத்தை தாங்கவே முடியாத தட்சிணாமூர்த்தி, லோகநாயகியை இழுத்து கொண்டு போய் தோட்டத்தில் வீட்டில் வைத்து அடைத்துவிட்டார்.

. ஒரு சலூன் கடைக்காரரை கூட்டிவந்து லோகநாயகிக்கு மொட்டையும் போட்டார்.. இறுதியில் அந்த வீட்டிலேயே லோகநாயகியை வைத்து பூட்டியும் விட்டார்.

அப்போதும், ஃபேஸ்புக்கில் ஒருசிலரை தொடர்புகொண்டு உதவி கேட்டதன் மூலம், இந்த விஷயம் சமூக நலத்துறைஅதிகாரிக்கு தெரியவந்துள்ளது..

அவர்கள் லோகநாயகியை மீட்டு ஒரு வேனில் அழைத்து வந்தனர்.. இந்த விஷயத்தை கேள்விப்பட்டு தட்சிணாமூர்த்தி அந்த வேனை நடுவழியில் வழிமறித்து தகராறு செய்தார்.

எனினும் அதிகாரிகள் கலெக்டர் அலுவலகத்துக்கு லோகநாயகியை பத்திரமாக அழைத்து சென்றனர்.. அங்கு வைத்து இரு தரப்பிலும் விசாரணை நடத்தப்பட்டது..

. ஃபேஸ்புக் பைத்தியம் பிடித்துவிட்டதால்தான் மொட்டை அடைத்தேன் என்று தட்சிணாமூர்த்தி சொல்ல, பூட்டி வைத்து கொடுமைப்படுத்தும் சைக்கோ கணவருடன் வாழ முடியாது என்று லோகநாயகி சொல்ல… தொடர் விசாரணை நடந்து வருகிறது.

Share.
Leave A Reply