வவுனியா- செட்டிகுளம், வீரபுரம் பகுதியில் 10 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில், 42 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்தனர்.

10 வயது சிறுமி தினமும் காட்டுப்பகுதிக்கு அருகாமையில் உள்ள வீதியினூடாக செல்வதை தொடர்ந்து அவதானித்த நபர் ஓருவர் வீரபுரம் காட்டுப்பகுதியில் வைத்து சிறுமியை மறித்து பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் வீரபுரம் பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய நபர் ஓருவரை கைது செய்து நேற்று நீதிமன்றில் முற்படுத்தியதன் அடிப்படையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

அத்துடன், சிறுமியை சட்ட வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை செட்டிகுளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply