பாடசாலை மாணவியான தனது 15 வயது மகளை மூன்று மாத கர்ப்பிணியாக்கிய 59 வயது தந்தையையும் அதற்கு உடந்தையாக இருந்த 57 வயது தாய் ஒருவரையும் கைது செய்துள்ளதாக குறுந்துவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.

உடுவெள்ள மோவில் தோட்டப் பிரதேசத்தில் இடம்பெற்ற மேற்படி சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது
குறித்த மாணவி சில தினங்களுக்கு திடீர் சுகயீனமுற்று வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மற்றொரு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் மூலம் குறித்த மாணவி மூன்று மாத கர்ப்பிணி என தெரிய வந்துள்ளது

இந்தச் சம்பவம் தொடர்பாக வைத்தியசாலை நிர்வாகம் குறுந்து வத்தை பொலிஸாருக்கு  அறிவித்ததனையடுத்து பொலிஸார் மாணவியிடம் மேற்கொண்ட விசாரணையின்போது தனது கர்ப்பத்துக்கு காரணம் தனது நண்பர் ஒருவர் எனக் கூறியுள்ளார்

இவ்வாறு மாணவி கூறியதில் சந்தேகம் கொண்ட பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்த விசாரணைகளையடுத்தே தனது தந்தை தன்னை வல்லுறவுக்கு உட்படுத்தியதாகவும் அதன் பின்னர் தொடர்ந்து தன்னுடன் அவ்வாறு நடந்து கொண்டதாகவும் இவ்விடயம் தனது தாய்க்கும் தெரியும் என்றும் மாணவி பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் கூறியுள்ளார்

மேற்படி சம்பவத்தை யடுத்து சந்தேக நபரான தந்தை தலைமறைவாகியிருந்த நிலையில், குறுந்துவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கப்பில விஜேரட்னவில் வழிகாட்டலுக்கமைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி சமன் முனசிங்க தலைமையிலான பொலிஸார் குறித்த சந்தேக நபரை இன்று (18) அதிகாலை வெலம்பொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வட்டதெனிய காட்டுக்குள் மறைந்திருந்த நிலையில் சுற்றிவளைத்து கைது செய்தனர்.

சந்தேக நபர்களிடம் (பெற்றோர்கள்) விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் விசாரணையின் பின்னர் கம்பளை மாவட்ட நீதி மன்றில் ஆஜர் படுத்த நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

Share.
Leave A Reply