2020 இன் முதலாவது சூரிய கிரகணம் நாளை ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.
இது நெருப்பு வளைய சூரிய கிரகணமாக பெயரிடப்பட்டுள்ளது.
இந்த சூரிய கிரகணத்தை இலங்கையிலும் அவதானிக்க முடியும் என்பதோடு யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு பிரதேசத்தில் 24 வீதமும் , கொழும்பு பிரதேசத்தில் 16 வீதமும் தென்படும்.
இது தொடர்பில் இலங்கை கோள் மண்டலத்தின் பணிப்பாளர் கே.அருணு பிரபா பெரேரா மேலும் தெரிவித்திருப்பதாவது :
இந்த நெருப்பு வளைய சூரிய கிரகணம் காலை 10.24 மணிக்கு இலங்கையில் ஆரம்பமாவதோடு இதனை யாழ்ப்பாணத்தில் முற்பகல் 11.54 மணிக்கும் கொழும்பில் முற்பகல் 11.51 மணிக்கும் அவதானிக்க முடியும்.
இதனை அவதானிப்பதற்குப் பொறுத்தமான இலக்கம் 14 என்ற விசேட கண்ணாடி , சூரிய கிரகணத்தை அவதானிப்பதற்கான விசேட கண்ணாடி என்பவை மாத்திரமே பயன்படுத்தப்பட வேண்டும்.
ஏனைய கண்ணாடி பொருட்கள் , எக்ஸ்ரே அட்டைகள் என்பவற்றைப் பயன்படுத்தி இதனைப் பார்வையிட வேண்டாம் என்று பொது மக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். குறிப்பாக வெற்றுக் கண்களால் இதனை அவதானிக்க வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.