அதனைத்தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என ஹாட்ரிக் வெற்றி படங்களை கொடுத்து, தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்கள் பட்டியலில் அங்கம் வகிக்கிறார். விரைவில் பாலிவுட்டில் ஷாருக்கான் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார்.
இந்நிலையில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் விஜய்க்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ள அட்லீ, “என்னோட அண்ணா, என்னோட தளபதி. என்னைவிட உங்களை தான் நான் அதிகமாக நேசிக்கிறேன்.
உங்களை மதிக்கிறேன். உங்களுக்கு நிறைய கடமைபட்டிருக்கிறேன். நீங்க இல்லாம நான் இல்லை. லவ் யூ அண்ணா.
பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா”. என குறிப்பிட்டுள்ளார். அதோடு பிகில் படப்பிடிப்பின் போது விஜய்யுடன் எடுத்த புகைப்படம் ஒன்றையும் அட்லீ பகிர்ந்துள்ளார்.
Share.
Leave A Reply