அமெரிக்காவை மையமாக வைத்து செயல்படும் அமைப்பு ஒன்று சமீபத்தில் தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட, அந்த வீடியோ உலகெங்கும் வைரலானது.
காரணம், அந்த வீடியோவில், அலிகேட்டர் என்னும் வகையை சேர்ந்த இரண்டு முதலைகள் ஒரு பெரிய மர நாரையை சுற்றி வளைத்து, இரையாக்க முயற்சி செய்கின்றன.
ஆனால் அந்த நாரை, முதலையின் தாக்குதலை எதிர்த்து தாக்குதலில் ஈடுபடுகின்றது. நீருக்கு அருகில் வெளியே வைத்து இந்த சண்டை நடைபெறும் நிலையில், நீருக்குள் அதிக வலிமையுடன் இருக்கும் முதலை மெதுவாக நீருக்குள் செல்ல நாரையும் நீருக்கு சென்று முன்பை விட வலிமையாக முதலைகளை எதிர்கொண்டது.
நாரையின் வலிமையை அறிந்து கொண்ட முதலைகள், ஒரு கட்டத்திற்கு பின் பின்வாங்குகின்றன. இந்த குட்டி வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
Voir cette publication sur Instagram