போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஊடாக கிடைக்கப்பெற்ற சமாதான காலப்பகுதியில் விடுதலை புலிகள் இயக்கத்திலிருந்து கருணா அம்மானை பிரித்தெடுத்து உபாய முறையாக பயன்படுத்தினோம்.

அதற்காக அவருக்கு கட்சியில் உப தவிசாளர் பதவியையோ அமைச்சு பதவியையோ வழங்கி உள்வாங்கவில்லை என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி முக்கிய உறுப்பினர்கள் பலர் ரணில் விக்கிரமசிங்கவை அவரது இல்லத்தில் சந்தித்து தேர்தல் பிரசார நடவடிக்கைகள் உள்ளிட்ட சமகால அரசியல் விவகாரங்கள் குறித்து கலந்துரையாடினர்

இதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் தெளிவுப்படுத்துகையில் ,

2001 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சமாதான ஒப்பந்தத்தின் போது விடுதலை புலிகள் இயக்கத்திலிருந்து கருணா அம்மானை பிரித்தெடுத்தோம்.

இதன் பின்னர் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக கருணாவை உபாய முறையாக பயன்படுத்தினோம் என்றும் அவர் தெரிவித்தார்.

Share.
Leave A Reply