உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் தீவிரமாக தாக்கி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இருப்பினும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இந்நிலையில் தஞ்சை மருத்துவக் கல்லூரியில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 13 வயது சிறுவன் உயிரிழந்தார்.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சிறுவன் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மரணம் அடைந்தாக கூறப்படுகிறது
கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை தொடர்ந்து மாவட்ட எல்லைகளில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தற்போது இ-பாஸ் இல்லாமல் வருபவர்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.